ேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால், சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், கடைகளில் பழுதடைந்துள்ள விற்பனை முனைய இயந்திரங்களை உடனுக்குடன் வட்ட பொறியாளர்களே சரி செய்து தர வேண்டும், பழுதடைந்த நிலையில் இருக்கும் ரேஷன் கடை கட்டடங்களைச் சீரமைக்க வேண்டும், ரேஷன் கடை பணியாளர்களுக்கான ஊதியம், மாதத்தின் முதல் நாளே வழங்க ஆவன செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தனர்.
மாதத்தின் தொடக்கத்திலேயே ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால், மக்கள் அத்தியாவசிய பொருட்களைப் பெற முடியாமல் பாதிக்கப்படுவார்கள் என்பதால், போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று கூட்டுறவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு, போராட்டத்தில் ஈடுபடும் அனைத்து நாட்களுக்கும் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
**-வினிதா**
வேலைநிறுத்தப் போராட்டம்: ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை!
+1
+1
+1
+1
+1
+1
+1