<பாஜகவில் இணைவதாக வெளியான தகவல் குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.
சமீப காலமாக பாஜகவில் திரைத் துறையைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் இணைந்து வருகிறார்கள். நடிகர்கள் ராதாரவி, ஆர்.கே.சுரேஷ், இயக்குனர் பேரரசு, தனுஷின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா, நடிகைகள் நமீதா, கௌதமி, மதுவந்தி, குட்டி பத்மினி உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்தனர். இவர்களுக்கு கட்சியில் பதவியும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று டெல்லியிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் குஷ்புவும், காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
இதுபோலவே நடிகர் விஷால், இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோரும் பாஜகவில் இணையவுள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் உலா வரத் துவங்கியது. ஆனால், இந்தத் தகவலை முற்றிலும் மறுத்துள்ளார் சந்திரசேகர்.
இதுதொடர்பாக எஸ்.ஏ.சந்திரசேகர், “நான் பாஜகவில் இணையப்போவதாக வரும் தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்தியே. அதுகுறித்த தகவல்களில் எந்த உண்மையும் இல்லை. இப்படிப்பட்ட தகவல்கள் எப்படி பரப்பப்படுகின்றன எனத் தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.
**எழில்**�,