அதிமுகவின் ஊழல்கள் – பின்வாங்க மாட்டேன்: ஆர்.எஸ்.பாரதி

திமுகவினரை மிரட்டிப் பார்க்க முயற்சி செய்கிறார்கள் என மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.

பட்டியலின மக்களை விமர்சித்துப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடந்த மே 23ஆம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார். அவருக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் அளித்தது. அவகாசம் முடிந்த நிலையில் நேற்று (ஜூன் 1) சென்னை எழும்பூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி சரணடைந்தார்.

அப்போது அவரது ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆர்.எஸ்.பாரதி சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், வில்சன், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகி பழிவாங்கும் நடவடிக்கையாக வழக்கு தொடரப்பட்டிருப்பதாக வாதங்களை எடுத்துவைத்தனர். காவல் துறை தரப்பில் குற்றவியல் வழக்கறிஞர் நாகராஜன் ஆஜராகி ஜாமீன் அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். மனுதாரர் கல்யாணசுந்தரம் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தீர்ப்பளித்த நீதிபதி செந்தில்குமார், தேவைப்பட்டால் ஆஜராக வேண்டும் என்கிற நிபந்தனையுடன் ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுகவை களங்கப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் என் மீதும் திமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மீதும் பொய் வழக்கைப் போடுகிறார். என் மீது போடப்பட்ட வழக்கில் தேவைப்பட்டால் ஆஜராக வேண்டும் என்கிற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எங்களைக் கைது செய்வதில் காட்டும் ஆர்வத்தை, கொரோனாவில் தத்தளித்துக்கொண்டிருக்கும் சென்னையிலுள்ள அப்பாவி மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

பழிவாங்கும் நோக்கத்தைக் கைவிட்டுவிட்டு, திமுகவின் யோசனையை ஏற்று செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கொரோனா உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் அளித்தீர்கள், தொடர்ந்து அதுபோல புகார் அளிப்பீர்களா என்று செய்தியாளர் கேள்வி எழுப்ப, “திமுக தலைவர் ஸ்டாலினின் அறிவுரைக்கு ஏற்ப அமைப்புச் செயலாளர் என்கிற வகையில் அதிமுக ஆட்சியின் ஊழலை துகிலுரிப்பதில் கடுகளவும் பின்வாங்க மாட்டேன்” என்று பதிலளித்துள்ளார்.

**எழில்**�,

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts