பணப்பட்டுவாடா வழக்கு: இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றம்!

Published On:

| By Balaji

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா குறித்து மருது கணேஷ் தொடர்ந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

2017 ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின் போது அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட தினகரனுக்கு ஆதரவாக 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா செய்தது குறித்த ஆவணங்கள் சிக்கியது. இதனை அடிப்படையாக வைத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆனால், முன்னாள் எம்.எல்.ஏ, நரசிம்மன் தொடர்ந்த வழக்கில் அபிராமபுரம் காவல் துறையினர் பதிவு செய்த வழக்கை ரத்துசெய்ய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரமேஷ் உத்தரவிட்டார்.

பணப்பட்டுவாடா விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி திமுக வேட்பாளராக போட்டியிட்ட மருதுகணேஷ் தரப்பிலிருந்து கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை மார்ச் 12ஆம் தேதி வர இருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ நரசிம்மன்

தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று (மார்ச் 6) விசாரித்த நீதிபதிகள், மருது கணேஷின் வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இடைக்காலத் தடை விதித்தனர். இதுதொடர்பாக எதிர் மனுதாரரான மருது கணேஷ் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share