}முதல்வர் வேட்பாளர்: பொதுவெளியில் பேசாதீர்கள்!

Published On:

| By Balaji

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்துக்கு கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் ஆகியோர் பதிலளித்துள்ளனர்.

அதிமுகவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் என இருவரும் இணைந்து வழிநடத்தி வரும் சூழலில், சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து முதல்வரைத் தேர்ந்தெடுப்போம் என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவிக்க, “எடப்பாடியார்தான் என்றும் முதல்வர்” எனவும், இதை இலக்காக நிர்ணயித்து தேர்தலைச் சந்திப்போம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 12) செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, “அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முதல்வர் வேட்பாளர் குறித்த தனது ஆசையைத் தெரிவித்திருக்கலாம். செல்லூர் ராஜு முதல்வருக்கான தேர்வு விதியைத்தான் கூறியிருக்கிறார். ஆனால், முதல்வர் வேட்பாளர் குறித்து கட்சித் தலைமை உரிய நேரத்தில் அமர்ந்து பேசி முடிவெடுக்கும்” என்று கூறியுள்ளார்.

இதே கருத்தைத் தெரிவித்துள்ள மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “முதல்வர் வேட்பாளர் என்பது கட்சியின் நலன் கருதி கட்சி எடுக்க வேண்டிய முடிவு. முதல்வர் வேட்பாளர் பற்றி பொது வெளியில் பேசுவது கட்சியைப் பலவீனப்படுத்தும். அதுகுறித்து பொது வெளியில் பேசுவது ஆரோக்கியமாக இருக்காது. இந்த நேரத்தில் எதிரிகளுக்கு வாய்ப்பளித்துவிடக் கூடாது. அதிமுக ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்பதுதான் எங்களின் இலக்கு” என்று கூறினார்.

முதல்வர் வேட்பாளர் குறித்து அதிமுகவினர் யாரும் கருத்து கூறாமல் இருப்பது நல்லது எனவும், அதிமுகவின் அடுத்த முதல்வர் யார் என்பது உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும்.அமைச்சர்கள் கூறுவது கட்சியின் கருத்து இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share