பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 19) காலை 9 மணிக்கு நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அப்போது மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். இதற்கு நாடு முழுவதிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், முதல்வர்கள் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, விவசாயிகள் சத்தியாகிரகம் ஆணவக்காரர்களை தலைகுனியச் செய்துள்ளது. அநீதிக்கு எதிரான போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றிக்காக விவசாயிகளுக்கு வாழ்த்துகள். விவசாயிகள் வாழ்க என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ராகுல் காந்தி, “மூன்று வேளாண் சட்டங்களை இந்த அரசு திரும்பப் பெற்றே ஆக வேண்டும்” என்று கூறியிருந்தார். அதனையும் தற்போது தனது ட்வீட்டில் டேக் செய்துள்ளார் ராகுல் காந்தி.
**-பிரியா**
�,