pஇது ஒரு கோழையான அரசாங்கம்: ராகுல் காட்டம்!

politics

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று காலை அவை கூடியதும், எதிர்க்கட்சிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

12 மணிக்கு அவை கூடியதும் விவாதங்கள் எதுவுமின்றி 3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது. மக்களவையில், பிற்பகல் 12.06 மணிக்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டு 12.10 மணிக்கெல்லாம், 4 நிமிடங்களில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையிலும் விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் நிராகரித்தார்.

இந்நிலையில், இந்த மசோதா மீது ஏன் விவாதம் நடத்த அனுமதிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “இந்த வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றி. விவசாயிகளின் வெற்றி என்றால் அது நாட்டினுடைய வெற்றி. ஆனால் நாங்கள், குறைந்தபட்ச ஆதார விலை, லக்கிம்பூர் விவசாயிகள் கொலை, 750 விவசாயிகளின் உயிரிழப்பு ஆகியவை குறித்து விவாதிக்க விரும்பினோம். அதற்கு அனுமதிக்கவில்லை. ஏனெனில் மத்திய அரசு பயப்படுகிறது.

இந்த விவகாரத்தில் விவசாயிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் பலத்தை மத்திய அரசால் எதிர்கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. இந்த சட்டம் பிரதமரின் பிரதிபலிப்பல்ல. அவரின் பின்னால் இருக்கும் சக்தி வாய்ந்தவர்களின் பிரதிபலிப்பு. அதனால் தான் விவாதம் நடத்த விரும்பினோம். விவாதம் நடைபெறாமல் மசோதா நிறைவேற்றப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மாநில தேர்தல்கள் வரவுள்ள நிலையில், அதனை கருத்தில் கொண்டு ரத்து செய்திருக்கின்றனர்” என்று தெரிவித்தார்.

அதுபோன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நாடாளுமன்றத்தில் விவாதம் செய்யும் உரிமையைப் பறித்தது யார்?. இது ஒரு தோல்வி. இது ஒரு கோழை அரசாங்கம்” என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார். இன்று இரவுக்குள்ளே குடியரசுத் தலைவரிடம் இந்த சட்டத்துக்கு ஒப்புதல் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *