எங்கும் நடக்காததையா செய்துவிட்டார் ராகவன்? சீமான் கேள்வி!

politics

பாஜக பொதுச் செயலாளராக இருந்த கே.டி.ராகவன் பாலியல் ஆடியோ சர்ச்சை பற்றி இன்று (ஆகஸ்டு 30) சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது கொதித்த சீமான், “இதெல்லாம் விவாதிக்க வேண்டிய பிரச்சினையா? சமூகக் குப்பை.இதில் எது அநாகரிகம் என்பதை பற்றி நாம் பேச வேண்டும். அவருடைய அனுமதியில்லை. அவருடைய ஒப்புதல் இல்லை. அவருக்குத் தெரியாமல் அவருடைய படுக்கை அறையில் , கழிவறையில் எல்லாம் கருவி வைத்து எடுத்துக்கிட்டு வர்றது என்பது சரியா? முதலில் அதுதான் சமூகக் குற்றம். அதை செய்தவரை கைது செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

உலகத்திலேயே எங்கும் நடக்காத ஒன்றை செய்துவிட்டார் என்பதுபோல நீங்கள் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்? சட்டமன்றத்தில் ஆபாசக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதெல்லாம் செய்யக் கூடாது.

அவர் தனிப்பட்ட முறையில் அறைக்குள் செய்ததை எடுத்து வைத்துக் கொண்டு அவர் அப்படி பண்ணிவிட்டார், அப்படி பண்ணிவிட்டார் என்றால்? கேடுகெட்ட சமூகமாக மாறிவிட்டதோ என்ற பயம் வருகிறது இப்போது.

யார் யாரோடு பேசுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை எல்லாம் ஒட்டுக் கேட்பது பதிவு செய்வது , அதை வெளியிடுவது இதனாலெல்லாம் என்ன சாதிக்க முடியும் என்று நினைக்கிறார்கள்?

எல்லா பொதுத்துறை நிறுவனத்தையும் தனியார் மயப்படுத்திக் கொண்டிருக்கிறது அரசு. நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இல்லாமல் சட்டங்கள் இயற்றப்படுவது பற்றி உச்ச நீதிமன்ற நீதிபதி கவலை தெரிவிக்கிறார். அதைப் பற்றியெல்லாம் பேசுங்கள்” என்று பதிலளித்தார் சீமான்.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *