தமிழக சட்டப்பேரவையில் நேற்று (ஏப்ரல் 12) பொதுப்பணிகள், சிறு துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
பொதுப்பணித் துறை சார்பில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.
அதில், சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் 190சி வகை அரசு அலுவலர்களுக்கான புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு 7,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
பொதுப்பணித் துறையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க 308 உதவிப் பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
சென்னை சேப்பாக்கம் வளாகத்தில் உள்ள பழைய சம்பளக் கணக்கு அலுவலகக் கட்டடம் மற்றும் வேளாண்மை அலுவலகத்துக்கு அருகில் உள்ள பதிவு அலுவலகப் பாரம்பரிய கட்டடம் 21.18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறுசீரமைத்துப் புனரமைக்கப்படும்.
கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் உள்ள பிரதான நிர்வாக பாரம்பரிய கட்டடம் 7.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறு சீரமைத்துப் புனரமைக்கப்படும்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப் பள்ளியின் பாரம்பரிய கட்டடம் ரூ.5.50 மதிப்பீட்டில் மறு சீரமைத்துப் புனரமைக்கப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் முகாமில் உள்ள கலோனியல் மாளிகை 2.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறுசீரமைத்துப் புனரமைக்கப்படும்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள சத்தியமூர்த்தி மேல்நிலைப் பள்ளியின் பாரம்பரிய கட்டடம் ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைத்துப் புனரமைக்கப்படும்.
கோயம்புத்தூர் மாவட்டம் ராஜா தெருவில் உள்ள சிசிஎம்ஏ அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பாரம்பரிய கட்டடம் ரூ.7.60 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹால் ரூ.16 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
தஞ்சாவூர் அரண்மனையில் உள்ள சம்பாஜ் ராஜா போசலே குடியிருப்பு பாரம்பரிய கட்டடம் ரூ.3.86 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைத்துப் புனரமைக்கப்படும்.
தஞ்சாவூர் அரண்மனையில் உள்ள மூத்த இளவரசர் அருங்காட்சியகப் பகுதி ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைத்துப் புனரமைக்கப்படும்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கைரேகை பதிவு மற்றும் பொருளாதார அலுவலக பிரிவு அலுவலகம் இயங்கி வரும் பாரம்பரிய கட்டடம் ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
கடலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழைய மாவட்ட நீதிமன்ற பாரம்பரிய கட்டடம் ரூ.3.19 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைத்துப் புனரமைக்கப்படும்.
அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் தேவைப்படும் பொறியியல் உபகரணங்கள் மற்றும் தரக்கட்டுப்பாடு ஆய்வக உபகரணங்கள் ஒரு மண்டலத்துக்கு தலா ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் 10 கோடி ரூபாய் செலவில் கொள்முதல் செய்து வழங்கப்படும்.
திருவண்ணாமலை மற்றும் வேலூரில் புதிய கூடுதல் சுற்றுலா மாளிகைகள் வாணியம்பாடியில் ஒரு ஆய்வு மாளிகை மொத்தம் ரூ.17.42 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
**-பிரியா**
.