ரஷ்யா உக்ரைன் போர் 100 நாட்களை தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போரில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ரஷ்யாவில் இருந்து வெளியேறிய வெளிநாட்டு நிறுவனங்கள் மிகவும் வருத்தப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இந்தப் போரை நடத்த பல நாடுகள் பலவித முயற்சிகளை செய்த போதிலும், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்தப் போரில் ரஷ்ய நாட்டுக்நாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவிகள் நிதி உதவிகளை, வழங்கி வருகின்றனர்.
பல்வேறு மேற்கத்திய நாடுகள் போர் தொடங்கியதிலிருந்து ரஷ்ய நாடு மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. கார் உற்பத்தி நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் உட்பட பல வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களது கிளைகளை மூடி அந்த நாட்டை விட்டு வெளியேறி உள்ளன. தற்போது உக்ரேன் தலை நகரத்திலும், கிழக்கு பகுதியிலும், ரஷ்ய படைகள் தங்கள் தாக்குதல்களை கடுமையாக்கி உள்ளன.
இந்நிலையில் மாஸ்கோவில் இளம் தொழில் அதிபர்களுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பேசுகையில், “ரஷியாவில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறியது, மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத்தில் அமெரிக்கா எவ்வளவு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதற்கு சிறந்த ஆதாரமாகும். ரஷ்யாவை விட்டு வெளியேற பல நிறுவனங்கள் கட்டாயப்படுத்தப்பட்டன. ரஷ்யா சந்தை மதிப்பு அதிகம் கொண்ட ஒரு நாடு. ரஷ்யாவில் இருந்து வெளியேறிய வெளிநாட்டு நிறுவனங்கள் மிகவும் வருத்தப்படுவார்கள்.” என்று தெரிவித்தார்.
.