Kகாங்கிரஸை துரத்தும் கொரோனா!

Published On:

| By Balaji

L

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்காக தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. இதனால், சிலர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

லேசான அறிகுறிகள் இருந்ததன் காரணமாக பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

“கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலம் பெற்று விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்” என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர்களை கொரோனா விரட்டி வருகிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்களான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, திக் விஜய் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சசி தரூர், அதீர் ரஞ்சன் சௌத்ரி என அடுத்தடுத்து தலைவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

**வினிதா**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share