நம் நாடு இன்னமும் விவசாயத்தைச் சார்ந்த பொருளாதாரத்தை நம்பியுள்ள நிலையில், விவசாயத்தின் வளர்ச்சிக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என பல தரப்பிடமும் பெருங்குறை உண்டு. குறிப்பாக, விவசாயத்துக்கு அரசாங்கம் தனி வரவு-செலவு அறிக்கையைத் தாக்கல் செய்தால், அது இன்னும் சரியாக கவனிக்கப்படும் என உழவுத் தொழில் சார்ந்த வல்லுநர்களும் அமைப்புகளினரும் தொடர்ச்சியாக கோரி வந்தனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசாங்கம் பதவிக்கு வந்ததும், அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டிலேயே வேளாண்மைத் துறைக்கென தனியாக வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் வேளாண்மை உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகளைப் பாதுகாக்கவும் கவனம் செலுத்தப்படும் என்பதில் இந்த அரசாங்கம் நம்பிக்கையோடு உள்ளது.
மூத்த அமைச்சர்களில் ஒருவரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இந்த முறை இந்தத் துறைக்குப் பொறுப்பேற்றதும், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து ரூ.300 கோடியில் 3,204 ஊராட்சிகளில் **’கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்’ **கொண்டு வரப்பட்டுள்ளது. இதைப் போல, 7.5 இலட்சம் ஏக்கர் பரப்பில் 3000 நிலத் தொகுப்புகளில் ‘முதல்வரின் மானாவாரி நில மேம்பாட்டுத் திட்ட’மானது ரூ.132 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையிலான இந்தத் துறையால், கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195, கொள்முதல் விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.2,950 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இதுவரை இல்லாதபடி சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, இரண்டு சிறுதானிய சிறப்பு மண்டலங்கள், குறிப்பாக துவரைப் பயிருக்கென சிறப்பு மண்டலம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
உரிய நேரத்தில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட்டதுடன், கால்வாய்களை முன்கூட்டியே தூர்வாரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் **வரலாற்றுச் சாதனையாக 4.9 இலட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது.**
இன்றைக்கும் பொது விநியோகத்துக்கு அரிசியை வழங்கிக்கொண்டு இருக்கும் காவிரி டெல்டா விவசாயிகளுக்கென ரூ.61.09 கோடியில் குறுவைத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மொத்தம் 111.27 இலட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் உற்பத்திசெய்யப்பட்டு, சாதனை படைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ரூ.14 கோடி செலவில் திருவாரூர் மாவட்டத்தில் 9,500 மெட்ரிக் டன் கொள்ளளவில் 5 சேமிப்புக் கிடங்குகள் திறக்கப்பட்டுள்ளன. பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தும்வகையில் ரூ.2,339 கோடி ஒதுக்கப்பட்டது. மொத்தம், 9.27 இலட்சம் விவசாயிகளுக்கு ரூ.2,055 கோடி பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டது.
92 ஆயிரத்து 400 ஹெக்டேர் பரப்பில், 89 ஆயிரத்து 408 விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக ரூ.614 கோடி செலவில் நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் அமைக்கப்பட்டன.
வேளாண் பொறியியல் துறையில் ’இ-வாடகை’ செயலி மூலம் 6 ஆயிரத்து 804 விவசாயிகள் முன்பதிவு செய்து, வேளாண் எந்திரங்களையும் கருவிகளையும் வாடகைக்குப் பெற்று பயன் பெற்றுள்ளனர். 10,350 விவசாயிகளுக்கு ரூ.1.97 கோடி செலவில் வேளாண் கருவித் தொகுப்புகள் வழங்கப்பட்டன.
அக்ரி கிளினிக் அல்லது வேளாண்சார்ந்த தொழிலைத் தொடங்குவதற்கு, 193 பட்டதாரி இளைஞர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
80 ஆயிரம் ஹெக்டேரில் விளைவிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்கம் ஏற்பட்டு, பெரும் சேதம் உண்டாகும் நிலை ஏற்பட்டது. ரூ.20 கோடி செலவில் அது முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது.
கடந்த ஓராண்டில் ரூ.1,572 கோடி மதிப்புள்ள வேளாண் விளைபொருட்கள் விவசாயிகளால் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியதாகும்.
பாரம்பரிய நெல் பயிர் வகைகளைப் பாதுகாப்பதற்கே தன் வாழ்க்கையை அர்ப்பணித்து மறைந்தவர், நெல் ஜெயராமன். **ஆண்டுக்கணக்கில் அலைந்துதிரிந்து தேடலுடன் அவர் மீட்டுவைத்திருந்ததைப் போல, மரபு சார் நெல் ரகங்களைப் பாதுகாப்பதற்கென தனியான ஒரு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.**
கணிசமான அளவுக்கு விவசாயம் தொழில்மயமாகிவிட்ட புதியதொரு காலகட்டத்தில், தனியார் வேளாண் கல்லூரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. கரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அரசின் வேளாண்மை – தோட்டக்கலைக் கல்லூரிகள் ரூ.40 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் பசுமைப் பரப்பை அதிகப்படுத்த வனத்துறை, வேளாண்மைத் துறை ஆகியவை சார்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பிரிவாக, ‘விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கமும் ஒன்று. இத்திட்டத்தின் கீழ் 26 ஆயிரத்து 639 விவசாயிகளுக்கு 48 இலட்சத்து ஆயிரத்து 541 மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.
தொடரும் சாதனைகள்…
**விளம்பர பகுதி**