அதிகார பலத்தை எதிர்த்து தேமுதிக போட்டி: பிரேமலதா

politics

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று மதுரையில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ஆனையூர் பகுதியில் வாக்கு சேகரித்த பிரேமலதா, “கடந்த தேர்தல்களின் போது மதுரையில் நாங்கள் செல்லாத வார்டே இல்லை. இன்று மதுரைக்குப் பிரச்சாரத்திற்குச் செல்கிறேன் என்று சொன்னதும், ‘ என் மக்களைக் கேட்டதாக சொல்லு’ என கேப்டன் கூறினார்.

அவர் நலமாக இருக்கிறார். ஆட்சி , அதிகாரம், பண பலத்தை எதிர்த்து தேமுதிக வேட்பாளர்கள் உண்மை பக்கம் நிற்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். எந்த பக்கம் போனாலும் போட்டிப் போட்டுக்கொண்டு காசு கொடுப்பதைக் காண முடிகிறது. திமுகவும், அதிமுகவும் 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கின்றன.

ஆனால் எந்த பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. பொங்கலுக்குத் தரமான பொருட்கள் கொடுக்கப்படவில்லை. நீட் தேர்வு ரத்து, நகைக்கடன் தள்ளுபடி என திமுக கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் பொய்யானவை.

மக்களை ஏமாற்றியே பிழைத்த கட்சிகள் திமுக, அதிமுக. தேர்தலுக்குத் தேர்தல் காசு கொடுத்து வறுமையிலேயே வைத்திருக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும் என்பது தான் கேப்டனின் எண்ணம். அவருக்கு ஒரு வாய்ப்பு நீங்கள் கொடுத்திருந்தால், அவர் தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றியிருப்பார். அந்த வாய்ப்பை ஏன் மக்கள் கொடுக்காமல் இருக்கிறீர்கள் எனத் தெரியவில்லை. நிச்சயமாக தேமுதிகவுக்கான காலம் வரும்.

எனவே தேமுதிக வேட்பாளர்களுக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என வாக்கு சேகரித்தார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.