aதுரை வைகோவின் அதிகாரங்கள் என்னென்ன?

Published On:

| By Balaji

மதிமுகவின் தலைமைக் கழக செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ கடந்த அக்டோபர் 20ஆம் தேதி நடந்த கட்சியின் மாவட்ட செயலாளர்கள், உயர் நிலை குழு கூட்டத்தில் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டார்.

தலைமை கழக செயலாளர் பதவிக்கு அதிகாரங்கள் என்ன என்று அப்போது கேட்டபோது அதை கட்சி முடிவு செய்யும் என்று வைகோ கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று (நவம்பர் 17) தலைமை கழக செயலாளர் துரை வைகோ வின் பொறுப்புகள் அதிகாரங்கள் பற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மறுமலர்ச்சி திமுக சட்ட திட்ட விதி எண்: 23 இன் படி கழகப் பொதுச்செயலாளர் அளிக்கும் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்.

கழக சட்ட திட்ட விதி எண்: 26 இன் படி, தலைமைக் கழகத்தின் அன்றாட அலுவல்களை நிறைவேற்றவும்,கழகத்தின் எல்லா அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளவும் தலைமை நிலையம் இயங்கி வருகின்றது.

கழகப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இயங்கும் தலைமை நிலையப் பணிகளை, தலைமைக் கழக செயலாளர் ஒருங்கிணைப்பார்.

கழகப்பொதுச்செயலாளரின் சுற்றுப்பயணங்கள், சந்திப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் கடமையையும் தலைமைக்கழகச் செயலாளர் மேற்கொள்வார்.

கழகத்தின் நடவடிக்கைகள், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல்;

அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள் உள்ளிட்ட மற்ற பல்வேறு அமைப்புகளுடன் கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் தொடர்புகளில் பொதுச்செயலாளர் இடும் பணிகளை நிறைவேற்றுதல் தலைமைக் கழகச் செயலாளரின் பணி ஆகும்.

மதிமுக சார்பில் அமைக்கப்பட உள்ள தகவல் தொழில்நுட்ப அணியின் (MDMK IT- WING) பொறுப்பாளர் பொறுப்பையும், கூடுதலாக தலைமைக் கழகச் செயலாளரே கவனிப்பார்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

**வேந்தன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share