மானிய கோரிக்கை: முன்கூட்டியே தயாரான காவல்துறை!

Published On:

| By Balaji

தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வரின் இலாகாவான காவல் துறை மீதான மானிய கோரிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக காவல்துறை உயர் அதிகாரிகள் நேற்று (செப்டம்பர் 8) வீடியோ கான்பிரன்ஸ் மீட்டிங் நடத்தினர். மாவட்டம் மற்றும் மாநகரங்களில் உள்ள காவல்துறை அதிகாரிகளுடன் இந்த மீட்டிங் நடைபெற்றது.

அப்போது, இரண்டாம் நிலை காவலர்கள் முதல் ஏடிஜிபி வரையிலான அதிகாரிகளுக்கு அவசரமான உத்தரவைப் பிறப்பித்தனர் உளவுத் துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதமும் , டிஜிபி சைலேந்திரபாபுவும்.

அதில், ‘இரவு அனைத்து அதிகாரிகளும் மூவிங்கில் இருக்கவேண்டும், நாளை விநாயகர் சதுர்த்தி என்பதால் இரவு நேரத்தில் திடீரென்று யாராவது பொது இடத்தில் பிள்ளையார் வைத்திடப் போகிறார்கள். கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். காவல் நிலையத்திற்குள் விசாரணைக்கு என்று யாரையும் அழைத்து வரவேண்டாம். முக்கிய குற்றவாளிகள் என்றால் போலீஸ் கஷ்டடியில் இருக்கும்போது கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். 9ஆம் தேதி காலை முதல் இரவு வரையில் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் அவரவர் அலுவலகத்தில் தயாராக இருக்கவேண்டும். யாரும் விடுப்பில் போகக்கூடாது. விடுப்பில் போனவர்கள் பணிக்குத் திரும்பவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

இந்த உத்தரவைத் தொடர்ந்து இன்று (செப்டம்பர் 9) இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி, எஸ்பி, டிஐஜி ஐஜி முதல் அவரவர் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் வழக்கு சம்பந்தமான விபரங்களைத் தயாராகக் கையில் வைத்துக்கொண்டு காத்திருக்கிறார்கள்.

அதே நேரத்தில் கடந்த ஆட்சியில் செய்த சாதனைகளைச் சொல்லியும், பழிவாங்கும் நடவடிக்கையாக எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்குப் போடுவதைப் பற்றியும் பேசுவதற்கு முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குறிப்புகளைச் சட்டமன்றத்துக்குள் எடுத்துச் சென்றுள்ளார்.

தற்போது மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் வெளியிட்ட கொள்கை குறிப்பில், பொது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தமிழ்நாடு காவல்துறைக்கு இந்த அரசு எப்போதும் வழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் திகழும்.

தகுந்த திட்டமிடல் மற்றும் முறையான முயற்சிகள் மூலமாக இத்தகைய குறிக்கோள்களைத் தமிழ்நாடு காவல்துறை நிச்சயம் எட்டும் என்ற நம்பிக்கை அரசுக்கு உள்ளது.

காவல்துறையின் அனைத்து முயற்சிகளும் மனிதாபிமானத்துடன் நட்புறவோடு பொதுமக்களை அணுகும் குறிக்கோள்களை நோக்கியதாக இருத்தல் வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வணங்காமுடி**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share