பிரதமர் நரேந்திரமோடி இன்று (ஜூலை 5) பகல் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினார், இந்த சந்திப்பு முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஜூலை 3 ஆம் தேதி பிரதமர் மோடி லடாக் பகுதிக்குச் சென்று சீனாவுடனான எல்லைச் சண்டையில் ஈடுபட்டுக் காயம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு ஆறுதல் கூறினார். ராணுவ வீரர்கள் மத்தியிலும் உரையாற்றினார். இந்தநிலையில் குடியரசுத் தலைவரை சந்தித்த பிரதமர் சீனாவுடனான எல்லைப் பிரச்சினையின் நிலை பற்றியும், நாட்டில் கொரோனா தொற்றின் நிலை பற்றியும் விளக்கியிருக்கலாம் என்று தகவல்கள் வருகின்றன.
ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் கூற்றின்படி, “பிரதமர் மோடி குடியரசுத் தலைவருடனான சந்திப்பில் தேசிய, சர்வதேச பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வேந்தன்**�,