தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் டீசல் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. 34 மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து இன்று விற்பனையாகிறது.
இந்தியாவில் மொத்த தேவையில் 82 சதவிகித அளவுக்குக் கச்சா எண்ணெய்யை இந்திய அரசு இறக்குமதி செய்கிறது. இந்த சூழலில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த மாதம் மட்டும் மொத்தம் 13 முறை எரிபொருளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் மொத்தம் 34 மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்து விற்பனையாகிறது.
கோவை-102.83, கடலூர்-101.43,நீலகிரி-101.47 , கள்ளக்குறிச்சி-101.44, தர்மபுரி-100.68, திருப்பத்தூர்-101.46, விழுப்புரம்-101.05, அரியலூர்-100.13, திண்டுக்கல்-100.39, ஈரோடு-100.08
காஞ்சிபுரம்-100.21, கன்னியாகுமரி-100.13, கரூர்-100.07, கிருஷ்ணகிரி-100, மதுரை-100.06 நாகப்பட்டினம்-100.22, நாமக்கல்-100.20, பெரம்பலூர்-100.04, புதுக்கோட்டை-100.04, ராமநாதபுரம்-100.08, ராணிப்பேட்டை-100.50, சேலம்-100.33, சிவகங்கை-100.59, தென்காசி-100.20
தஞ்சாவூர்-100, தேனி-100.64, திருவண்ணாமலை- 100.80, திருவாரூர்-100, தூத்துக்குடி-100.22
திருப்பூர்-100.09, வேலூர்-100.37, விருதுநகர்-100.84, மயிலாடுதுறை-100, செங்கல்பட்டு-100 ஆகிய மாவட்டங்களில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.
பெட்ரோல் விலை உயர்வு குறித்து, தமிழக சுதந்திர வாடகை வாகன ஓட்டுநர்கள் சங்க செயலர் ஜூட் மேத்யூ கூறுகையில்,தற்போதைய சூழலில் 30 சதவிகித வணிகம்தான் நடைபெறுகிறது. மருத்துவ வசதி, திருமணம், இறுதிச் சடங்கு ஆகிய காரணங்களுக்காகத் தான் மக்கள் கார்களை பயன்படுத்துகின்றனர். வாங்க முடியாத அளவுக்கு பெட்ரோல் விலை உயர்ந்ததன் காரணமாக வாடகை டாக்ஸிகளுக்கு வாடகையை நிர்ணயம் செய்ய முடியவில்லை. வாடிக்கையாளர்கள் வாடகை பணத்தைத் தர மறுக்கும்போது, சவாரிகளை ரத்து செய்யவோ, அல்லது நஷ்டத்தில் இயக்கவோ கட்டாயப்படுத்தப்படுகிறோம். ஏற்கனவே வாகன நிதி நிறுவனங்கள் நிலுவைத் தொகையைச் செலுத்தாததற்காக வாகனங்களை எடுத்துச் செல்லும் நிலையில், இதுபோன்று எரிபொருள் விலை உயர்ந்து வருகிறது” என்று தி இந்துவிடம் தெரிவித்துள்ளார்.
அதுபோன்று மீனவர்கள், விவசாயிகள், வாடகை டாக்சி வைத்திருப்பவர்கள் எனப் பல தரப்பினரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
**-பிரியா**
�,