sநீட் பாதிப்பு : பொதுமக்கள் கருத்து கூறலாம்!

Published On:

| By Balaji

நீட் தேர்வு பாதிப்பு குறித்து பொதுமக்களும் கருத்து தெரிவிக்கலாம் என ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது.

நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆராயவும், மாற்று நடைமுறைகளை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், சட்ட வழிமுறைகள் குறித்து ஆராயவும் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இக்குழு ஜூன் 14ஆம் தேதி நடத்திய முதல் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த குழு தலைவர் ஏ.கே.ராஜன்,” நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு உள்ளது என்பதுதான் எங்கள் குழுவின் கருத்தாக உள்ளது. இருப்பினும் இன்னும் ஆதாரங்களை திரட்டி இறுதிகட்ட அறிக்கையை சமர்பித்த பின்னர்தான் முடிவு தெரிவிக்கப்படும்” என கூறினார்.

இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு குறித்து பெற்றோர்கள், மாணவர்கள்,கல்வியாளர்கள் என அனைத்து தரப்பினரிடம் கருத்து கேட்டதுபோல், நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து, மக்களின் கருத்தையும் இக்குழு கேட்டு இருக்கிறது.

இந்நிலையில் நீட் தேர்வால் மாணவர்களுக்கு பாதிப்பு உள்ளதா என்பது குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளை வரும் 23ஆம் தேதிக்குள் neetimpact2021@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் என அக்குழு தெரிவித்துள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share