நான் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கவில்லை என்று சொல்லிவிடுவார்களோ?-ப.சிதம்பரம்

Published On:

| By Balaji

nசென்னையில் பிரம்மாண்டமான குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்ற பிறகு, நேற்று (டிசம்பர் 23)முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “இந்தப் பேரணியின் மூலம் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பிரதமர் புரிந்துகொள்ள வேண்டும். சிஏஏ, என்.ஆர்சி தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

மேலும், “மக்கள் இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்த்திய இந்த ஆறு மாதத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக எதையும் செய்யாமல் 370, சிஏஎ, என்.ஆர்சி என்று நாட்டை மக்களை பிளவுபடுத்தும் வேலையைதான் இந்த அரசு செய்கிறது. இப்படிப்பட்ட பிரச்சினைகளை கிளப்பி மக்களை திசை திருப்புவதன் மூலம் பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை மூடி மறைக்கலாம் என்று நினைக்கிறது அரசு. ஆனால் பூனைக் கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டுவிடாது. நாங்கள் தொடர்ந்து பேசுவோம் எழுதுவோம்” என்ற ப. சிதம்பரத்திடம்,

“என் ஆர்சி கொண்டுவரப்பட்டால் உங்கள் ஆவணங்களை நீங்கள் அரசிடம் ஒப்படைப்பீர்களா அல்லது புறக்கணிப்பீர்களா?” என்று ஒரு நிருபர் கேட்க,

“என்னோட எஸ்.எஸ்.எல்.சி. பள்ளி இறுதி வகுப்பு சர்ட்டிபிகேட் எங்கேனு தெரியலை. வீட்ல தேடச் சொல்லியிருக்கேன். அது இல்லைன்னா ஒருவேளை நான் எஸ்.எஸ்.எல்.சி யே படிக்கலைனு சொல்லி விடுவார்களோ…பைத்தியக்காரர்கள்” என்று விமர்சித்தார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share