குழந்தைகளுக்குத் தடுப்பூசி: நம்மிடம் போதிய புரிதல் இருக்கிறதா?

politics

ககன்தீப் காங் (வேலூர் சி.எம்.சி. பேராசிரியர்)

30 க்கும் மேற்பட்ட நாடுகள் குழந்தைகளுக்கு எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசி அளித்துவருகின்றன. மேலும் நான்கு நாடுகள் சீன தடுப்பூசியை பயன்படுத்திவருகின்றன.

இந்தியா என்ன செய்ய வேண்டும்? என்ன தடுப்பூசியை பயன்படுத்த வேண்டும்? இந்தியாவில் இப்போது ஒமிக்ரான் வைரஸ் பரவிவருவதால் இது, இடர், பலன்கள் தொடர்பான அம்சங்களை மாற்றியுள்ளதா? ZyCoV-D, எனும் டிஎன்.ஏ தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு இதற்காக ஆர்டர் கொடுத்திருந்தாலும், இந்தத் தடுப்பூசி இன்னமும் பயன்பாட்டிற்கு வரவில்லை. மூன்றாம் கட்டச் சோதனையில் 12 முதல் 17 வயது வரையிலான 1,400 குழந்தைகள் பங்கேற்றனர். இது மொத்தம் தேவைப்படும் 28,000 பங்கேற்பாளர்களில் 5 சதவீதமாகும்.

அறிகுறிகள் கொண்ட 81 RT-PCR பாசிட்டிவ் தன்மை கொண்டவர்களிடம் நடத்திய இடைக்கால ஆய்வில் 66 சதவீதச் செயல்திறன் தெரியவந்தது. பிளேசிபோ கொடுக்கப்பட்ட 60 பேருடன் ஒப்பிடும்போது தடுப்பூசி பெற்ற 21 பேர் அடிப்படையில் இது அமைந்திருந்தது என்றாலும், குழந்தைகளில் தடுப்பூசி அல்லது பிளேசிபோ பெற்றவர் யாரும் இல்லை. ZyCoV-D கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால், 2mg DNA மூன்று டோஸ் கொடுக்கப்பட்ட 10 பெரியவர்களின் 8 பேர் ஆண்டிபாடி பெற்றதாக வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகள் தொடர்பாகக் குறைவான தரவுகளே உள்ள நிலையில், குழந்தைகளுக்கு அளிக்கப்படுவதற்கு முன் பெரியவர்களுக்கு இந்தத் தடுப்பூசியைப் பரவலாக அளித்து, பெரிய பாதுகாப்பான நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை (immunogenicity) உருவாக்குவது சிறந்தது.

பாரத் பயோடெக்கின் கோவேக்சின் 2 – 17 வயதிலுள்ள 528 குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு சோதிக்கப்பட்டது. இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது. இந்தத் தடுப்பூசி உலக சுகாதார அமைப்பின் அவசர கால அனுமதி பெற்றிருந்தாலும், இன்னமும் குழந்தைகளிடத்தில் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.

நோவோவாக்ஸ் தடுப்பூசியை அடிப்படையாக கொண்ட புரத துணை பிரிவி தடுப்பூசியான கோவாவாக்ஸ் (Covovax), செரம் இன்ஸ்டிடியூட்டால் தயாரிக்கப்பட்டது, 2முதல் 17 வயதுவரை கொண்ட 920 குழந்தைகள் மத்தியில் பரிசோதிக்கப்பட்டது. பயோலாஜிகல் இ தயாரித்த இன்னொரு துணைப் பிரிவு தடுப்பூசியான கோர்பாவெக்ஸ் 5 வயதுக்கு மேலான குழந்தைகளிடம் பரிசோதனை செய்யப்பட்டது. இந்தியக் குழந்தைகள் மத்தியில் செய்யப்பட்ட பரிசோதனை அனைத்தும், கிளினிகல் செயல்திறனுக்கு மாறாக எதிர்ப்பு சக்தியின் எதிர்வினையையே மையமாகக் கொண்டுள்ளதால், அடுத்த சில மாதங்களில் எஞ்சிய முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். தடுப்பூசிகள் பெரியவர்கள் மத்தியில் எதிர்ப்பு சக்தி தன்மை, செயல்திறன் மிக்கதாக இருந்தால் குழந்தைகள் மத்தியிலும் அதே பலனைக் கொண்டிருக்கும் என்றாலும், பாதுகாப்பையும் டோஸ் அளவையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

**கொள்கை முடிவு**

பெருந்தொற்றுக்கு மத்தியில் போதுமான தரவுகள் கைவசம் இருப்பது சாத்தியம் இல்லை என்பது புரிந்தாலும், கொள்கை முடிவை வகுக்கும்போது, ஆதாரங்களின் தரமும் எண்ணிக்கையும் முக்கியம். சர்வதேச அளவில் உலக சுகாதார அமைப்பு போன்றவை, ஆதாரங்களின் தரம் மற்றும் பரிந்துரைகளுக்கு கிரேட் எனப்படும் பரிந்துரைகள், ஆய்வு, மேம்பாடு, சீராய்வுக்கான மதிப்பீடு சாதனத்தை அளிக்கிறது.

அமெரிக்காவில் நோய்த் தடுப்பு கட்டுப்பாடு மையங்கள் அமைப்பு அண்மையில் குழந்தைகளுக்கான Pfizer-BioNTech தடுப்பூசிப் பயன்பாட்டைப் பரிந்துரைக்க இந்த கிரேட் சாதனத்தைப் பயன்படுத்தியது. 5முதல் 11 வயதுவரையான குழந்தைகள், பெரியவர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி அளவில் மூன்றில் ஒரு பங்கு டோஸ் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 – 11 வயதில் உள்ள 2,268 குழந்தைகள் மத்தியில் நடத்தப்பட்ட இரண்டாம், மூன்றாம் கட்ட மருத்துவச் சோதனை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகளுக்குத் தடுப்பூசி அளிக்கப்பட்டதோடு, மூன்றில் ஒரு பங்கு குழந்தைகளுக்கு பிளேசிபோ அளிக்கப்பட்டது. இடைக்கால ஆய்வுக்கு 3.3 மாதங்களுக்கு பிறகு, மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தடுப்பூசி 90.9 சதவீத குழந்தைகளுக்கு கோவிட்-19 தொற்றைத் தடுத்தது. தடுப்பூசி பெற்ற மூவர், பிளேசிபோ பெற்ற 16 பேர் தொற்று பெற்றாலும், யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. மேலும், குழந்தைகளில் உருவான ஆண்டிபாடிகள், 16 முதல் 25 வயதானவர்கள் மத்தியில் இருப்பதுபோல அமைந்திருந்தது.

யுகே தடுப்பூசி மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பின் கூட்டுக் குழு சிறார்களுக்கு இன்னமும் தடுப்பூசியைப் பரிந்துரைக்கவில்லை என்றாலும், முதன்மை மருத்துவ அதிகாரி 2021 செப்டம்பரில் 12 முதல் 15 வயதானவர்களுக்கு ஒரு டோஸ் பைசர் தடுப்பூசியைப் பரிந்துரைத்தார். பள்ளிகளில் கோவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுக்க இது உதவும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் குழந்தைகள் மீது இந்த நோயின் சுமை குறித்து குறைவான தரவுகளே உள்ளன.

ஒமிக்ரானைப் பொருத்தவரை, குறைந்தபட்சம் துவக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தரவுகள் அடிப்படையில், தடுப்பூசி போட்டுக்கொள்ள குறைவான வாய்ப்பு கொண்ட 18 – 34 வயது இளம் பிரிவினர் மத்தியில் பாதிப்பதாகத் தெரியவந்துள்ளது. எல்லா உருமாறிய வைரஸ்களிலும் பெரியவர்கள் பாதிக்கப்படலாம் என்றால் சிறார்களும் பாதிக்கப்படலாம். இருப்பினும், இப்போதைக்கு பரவல், தடுப்பூசி எதிர்ப்பு அல்லது பாதிப்பால் உண்டாகும் நோய் எதிர்ப்பு அல்லது தீவிரம் குறித்து ஓமிக்ரான் எப்படி இருக்கும் என்று நமக்கு எந்தப் புரிதலும் இல்லை. பரவல் விகிதம் அதிகமாக இருந்து, எந்த வயதுப் பிரிவிலும் நோய் தீவிரமாக இருந்தால், வைரஸ் ஆபத்தைக் குறைக்க சிறார்கள் தடுப்பூசி போடப்படுவது அவசியம். பரவல் அதிகம் இருந்து, நோய் அல்லது பாதிப்பு மிதமாக, அறிகுறிகள் இல்லாமல் இருந்தால், இப்போது உள்ளதைவிட நிலைமை பெரிதாக மாறிவிடாது. மேம்பட்ட தரவுகள் இல்லாமல் ஒமிக்ரான் மீது தடுப்பூசியின் தாக்கத்தைப் புரிந்துகொள்வது கடினம்.

தேசியத் திட்டத்தில் தடுப்பூசிகள் அறிமுகம் செய்யப்பட மூன்று அம்சங்கள் முக்கியமானவை. முதலில் நோயின் சுமை. தொற்றின் இடர், தீவிர தன்மை மற்றும் மரணம் ஆகிய அம்சங்கள் அடிப்படையில் இது அமைகிறது. இதை வயது, நிலப்பரப்பு மற்றும் இடர் குழுவுக்கு ஏற்ப பிரிப்பது சாத்தியமாக வேண்டும். இரண்டாவதாகத் தடுப்பூசியின் செயல்பாடு. பாதுகாப்பு, நோய் எதிர்ப்பு எதிர்வினை, தடுப்பு மற்றும் தடுப்பூசி தடுக்க கூடிய நோயின் அளவு இதற்காக கணக்கில் கொள்ளப்படுகின்றன. மூன்றாவதாக, திட்டத்தின் தயார் நிலை மற்றும் வளங்கள் ஆகியவை வருகின்றன.

**இந்தியாவின் சான்றுகள் **

இந்தியாவில் குழந்தைகள் மீது நோயின் சுமை குறித்துக் குறைந்த தரவுகளே உள்ளன. 2021 ஜூன், ஜூலையில் இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தால் நடத்தப்பட்ட செரோ சர்வோ முதல் முறையாகக் குழந்தைகளையும் உள்ளடக்கியிருந்தது. 6- 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பாதிக்கு மேல் தொற்று கொண்டிருப்பதை உணர்த்தியது. 6-9 வயதினரில் 57.2 சதவீதத்தினரில் ஆண்டிபாடி இருந்தது. 10-17 வயதினரில் இது 61.6 சதவீதமாக இருந்தது. 280 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்த்தியது. ஆனால், அதிக குழந்தைகள் தொற்று கொண்ட நிலையிலும், இவர்களில் எத்தனை பேர் தீவிர நோய் பாதிப்புக்கு உள்ளானார்கள் என்று நம்மிடம் போதிய தரவுகள் இல்லை. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு இணை நோய்கள் இருந்ததாகத் தெரியவந்தாலும், ஆரோக்கியமான குழந்தைகளும் தீவிர நோய்க்கு உள்ளாகி இறந்துள்ளனர். ஊடக செய்திகள், குழந்தைகள் மருத்துவர்களுடனான உரையாடல், ஒரு மருத்துவமனையில் கிடைக்கும் தகவல்கள் ஆகியவற்றைக் கொண்டு இந்தியாவில் குழந்தைகள் மத்தியில் தொற்று, நோய் தீவிரம், மரணம் தொடர்பாகப் புரிந்துகொள்ள முடியாது. தரவுகள் சேகரிக்கப்பட்டிருக்கலாம் என்றாலும் அவை பொதுவெளியில் இல்லை.

இந்தியாவில் தடுப்பூசி கையிருப்பு நல்ல நிலையில் இருந்தாலும், குழந்தைகள் விஷயத்தில் நம் நாட்டின் நலனுக்கேற்ற சிறந்த முடிவை எடுப்பதில் நிச்சயமற்ற தன்மை இருக்கிறது. இப்போதுள்ள நிலையில், இந்தியாவில் இணை நோய்கள் கொண்ட குழந்தைகள் தவிர மற்றவர்களுக்குத் தடுப்பூசியை அறிமுகம் செய்ய அவசரம் காட்ட வேண்டுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

இருப்பினும், உலகின் மற்ற பகுதிகள் போல, ஒற்றை அல்லது இரட்டை டோஸ் mRNA தடுப்பூசிகள் பயன்படுத்துவதன் தேவையைத் தீவிரமாகப் பரிசீலிக்கலாம். இந்தியாவில் பயன்படுத்தப்படும் தடுப்பூசி முழு உரிமம் பெற்றதாக இருப்பது அல்லது பெருந்தொற்று காலத்தில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டதாக இருப்பதை உறுதி செய்ய அரசு தனது கொள்கை முடிவுகளைப் பரிசீலிக்க வேண்டும்.

தயார் நிலை ஒரு பிரச்சினை இல்லை என்றாலும்கூட, சான்று அடிப்படையிலான அல்லது மாதிரி சார்ந்த முடிவை மேற்கொள்ள நோயின் சுமை, ஆரோக்கியமான குழந்தைகள் மீது தடுப்பூசியின் தாக்கம் ஆகியவை தொடர்பான தரவுகளில் உள்ள போதாமை இது குறித்து முடிவெடுப்பதில் தடையாக உள்ளதை உணர வேண்டும்.

ககன்தீப் காங் (வேலூர் சி.எம்.சி. பேராசிரியர், மூத்த வைராலஜிஸ்டு)

*

நன்றி: **[இந்தியா ஃபோரம் இணையதளம்](https://www.theindiaforum.in/article/do-we-know-enough-vaccinate-children-against-covid-19?utm_source=website&utm_medium=organic&utm_campaign=more-articles&utm_content=Homepage)**

தமிழில்: **சைபர் சிம்மன்**

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *