ராகுல் காந்தியும் ஐந்தாம் தலைமுறையும்: ராமச்சந்திர குஹா

politics

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த இரு நாட்களாக இலக்கிய விழா நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான நேற்று வரலாற்று ஆசிரியரும், எழுத்தாளருமான ராமச்சந்திர குஹா கலந்து கொண்டு பேசினார். அப்போது ஐந்தாம் தலைமுறை வாரிசான ராகுல் காந்தியால், பிரதமர் மோடியை ஒன்றும் செய்ய முடியாது என்று அவர் தெரிவித்துள்ளது தேசிய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விழாவில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துப் பேசிய குஹா, ”சுதந்திர இயக்கத்தின் போது காங்கிரஸ் மிகப் பெரிய கட்சியாக இருந்தது. ஆனால் நாளடைவில் பரிதாபகரமான குடும்ப கட்சியாக மாறிவிட்டது. இந்தியாவில் இந்துத்துவா மற்றும் மூர்க்க குணம் வளர்ந்ததற்குக் காங்கிரஸும் ஒரு காரணம். ராகுல் காந்திக்கு எதிராகத் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த பகையும் இல்லை. இளம் இந்தியாவுக்கு ஐந்தாம் தலைமுறை வாரிசுத் தேவையில்லை. மலையாளிகள் இந்தியாவுக்குத் தேவையான பல அற்புதமான காரியங்களைச் செய்துள்ளீர்கள். ஆனால் நீங்கள் செய்த பேரழிவில் ஒன்று ராகுல் காந்தியைத் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பியது தான்.

2024ல் நடைபெறும் தேர்தலில் மீண்டும் ராகுல் காந்தியைத் தேர்ந்தெடுத்தால் அது மோடிக்கு பெரும் நன்மையாகிவிடும். மோடி சுயமாக உருவானவர். 15 ஆண்டுகளாக ஒரு மாநிலத்தை நிர்வகித்துள்ள அனுபவம் அவருக்கு இருக்கிறது. அவர் நம்பமுடியாத அளவிற்குக் கடின உழைப்பாளி. அவர் ஐரோப்பாவில் ஒருபோதும் விடுமுறையைக் கழித்ததில்லை.

அதேசமயத்தில், ராகுல் காந்தியும் சிறந்த பண்பாளர், மிகவும் புத்திசாலி, கடின உழைப்பாளி, ஆனால் அவருடைய 5ஆம் தலைமுறைதான் அவருக்குப் பெரிய பலவீனம். காங்கிரஸ் கட்சி அழிந்து போன முகலாய சாம்ராஜ்யத்தைப் போல் இருக்கிறது. இந்தியா மிகுந்த ஜனநாயகமாக மாறி வருகிறது என்பதைக் காந்திகள் உணரவில்லை. நீங்கள் (சோனியா காந்தி) டெல்லியில் இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் சாம்ராஜ்ஜியம் கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கிக் கொண்டே போகிறது.

தற்போது நாட்டில் நிலவும் விவாதத்தைப் பாருங்கள். ஏன் எதற்கெடுத்தாலும் பாஜகவும் மோடியும் நேருவின் கொள்கைகளை விமர்சிக்கின்றனர்? காஷ்மீர் விவகாரத்தில் நேரு என்ன செய்துவிட்டார், சீனாவுடன் என்ன செய்துவிட்டார், முத்தலாக்கில் என்ன செய்து விட்டார் என்று மோடி தொடர்ந்து நேருவை விமர்சிக்கக் காரணம் என்ன?. ஏனென்றால் அது ராகுல் காந்தியால்தான். ஒருவேளை ராகுல் காந்தி அரசியலில் இல்லையெனில் மோடி தன் கொள்கைகளையும் , அதன் தோல்வி குறித்துப் பேசியாக வேண்டும்” என்றார். ராமச்சந்திரா குஹாவின் இந்த பேச்சு தேசிய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

2019 மக்களவைத் தேர்தலில் தனது சொந்த தொகுதியான அமேதியில் தோல்வியடைந்த ராகுல் காந்தி வயநாட்டில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *