aஓபிஎஸ்… தொண்டர்களுக்கு இட்ட கட்டளை!

Published On:

| By Balaji

எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்களைத் தவிர அதிமுக தலைமை அலுவலகத்தில் வேறு யார் பெயர்களையும் குறிப்பிட்டு கோஷம் எழுப்பக் கூடாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்.

அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைந்ததிலிருந்தே கட்சிக்குள் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. அதன்பின் கட்சியில் இரட்டைத் தலைமை உருவானது. ஆரம்பத்தில் கட்சிக்குள் சீரான நிலைமை இருந்தாலும், போகப் போக கட்சிக்குள் பிளவு உண்டானது. ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி அறிக்கைகள் விட்டு வந்தனர். இந்த நிலையில், ஜூன் 14ஆம் தேதி நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து நேற்று ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓபிஎஸ் சென்றிருக்கிறார். அப்போது அங்கு கூடியிருந்த சில பெண் தொண்டர்கள், “தேனி மாவட்ட சிங்கமே… தமிழ்நாட்டின் தங்கமே” என்று கோஷமிட்டுள்ளனர்.

கோஷமிட்ட தொண்டர்களை அழைத்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பெயரை தவிர வேறு யார் பெயரையும் கூறி கோஷம் எழுப்பக் கூடாது என ஓபிஎஸ் அறிவுரை வழங்கினார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share