hமோடியுடன் பன்னீர், எடப்பாடி சந்திப்பு!

politics

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (ஜூலை 26) காலை டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.

காலை 11.10 மணிக்கு தொடங்கிய இந்த சந்திப்பு சுமார் இருபது நிமிடங்கள் நடந்திருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓ.பன்னீர் செல்வத்துடன் அவரது மகனும் தேனி எம்பியுமான ரவீந்திரநாத், மனோஜ் பாண்டியன், எடப்பாடியோடு தளவாய் சுந்தரம், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்துக்குச் சென்றிருக்கிறார்கள்.

மோடியுடன் நடந்த சந்திப்பில் கோதாவரி-காவிரி இணைப்பு, மேகதாது பிரச்சினை பேசப்பட்டது என்று அதிமுக தரப்பில் சொல்லப்பட்டாலும் சசிகலா -தினகரனை அதிமுகவுடன் இணைப்பது தொடர்பாகவே பேசப்பட்டது என்றும் அதுகுறித்து மோடியிடம் பேசியபிறகு இன்று பிற்பகல் அமித் ஷாவையும் இருவரும் சந்திக்கிறார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் திமுக அரசு மாஜி அமைச்சர்கள் மீது தொடுத்து வரும் வழக்குகள் குறித்தும் இந்த சந்திப்புகளில் பேசப்பட வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள்.

அதிமுகவின் இருபெரும் தலைவர்களும் டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கும் நிகழ்வின் விளைவுகளை அறிய சசிகலாவும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *