ஒரே நாடு ஒரே தேர்தல்- மீண்டும் வலியுறுத்தும் மோடி

politics

‘ஒரு நாடு ஒரே தேர்தல்’ முறையை பிரதமர் மோடி மீண்டும் இன்று (நவம்பர் 26) வலியுறுத்தியுள்ளார்.

அரசியலமைப்பு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு குஜராத்தின் கெவாடியாவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் 80 வது அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டின் நிறைவு அமர்வில் கலந்துகொண்டு பிரதமர் உரையாற்றினார்.

அப்போது, “இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டுமென்ற எனது கருத்து விவாதத்திற்குரிய விஷயம் மட்டுமல்ல, இது இந்தியாவின் தேவை. மக்களவை, சட்டசபை மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களுக்கு ஒரே வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். தனித்தனி பட்டியல்களால் நாட்டின் வளம் வீணாகிறது. இந்த பட்டியல்களுக்காக நாம் ஏன் நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கிறோம்? என்று கேள்வி எழுப்பினார் மோடி.

மேலும் அவர் பேசுகையில், “2003 ஆம் ஆண்டில், பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இந்த விஷயத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசித்தார். ஆனால் அந்த யோசனையை தொடர முடியவில்லை. 21 ஆம் நூற்றாண்டில் ஒவ்வொரு சவாலையும் எதிர்த்துப் போராடுவதற்கான வழியை நமது அரசியலமைப்பு நமக்குக் காட்டுகிறது. நமது அரசியலமைப்பு அதன் 75 ஆவது ஆண்டை நோக்கி வேகமாக நகர்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், புதிய தசாப்தத்துடன் ஒத்திசைவாக செயல்முறைகளை மாற்ற திட்டமிட்ட வழியில் நாம் செயல்பட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார் மோடி.

**-வேந்தன்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.