சென்னை மெரினா கடற்கரை ரூ.20 கோடியில் அழகுப்படுத்தப்படும் என்று சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று (செப்டம்பர் 3) சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்று வனத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அதில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறையின் கீழ் அமைச்சர் மெய்யநாதன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு செட்டிக்குளத்தின் கரையை மேம்படுத்தி பூங்கா அமைக்க ரூ. 7 கோடி ஒதுக்கப்படும்.
சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் பசுமைப் பூங்கா அமைத்து சாலை வசதியை மேம்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கப்படும்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ரூபாய் 32 கோடியில் நவீனப்படுத்தப்படும்.
பொங்கல் மற்றும் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி அன்றும் அரசு சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.
அரசு மற்றும் தனியார் நிலங்களில் நாட்டு மரம் நடும் திட்டத்துக்கு ரூபாய் 50 கோடி ஒதுக்கப்படும்.
சென்னை மெரினா கடற்கரை 20 கோடி ரூபாய் செலவில் அழகுப்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் ஒலிம்பிக் மண்டலங்கள் அமைத்து வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். 2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் 50 வீரர்களை அனுப்ப தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடற்கரைகளின் தரம், பாதுகாப்பு, தகவல் மற்றும் பாதுகாப்புச் சேவையை உயர்த்த, மாசுபாட்டைக் குறைக்க அடுத்த ஐந்து ஆண்டுகளில் சென்னை மெரினா கடற்கரை, நீலாங்கரை, புதுக்கோட்டை மணல்மேல்குடி , கடலூர் வெள்ளி கடற்கரை, குஷி கடற்கரை உள்பட 10 கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடி தரச் சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
**-வினிதா**
�,