=
தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி முதல் நர்சரி பள்ளிகள் திறப்பு இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி, தமிழக அரசு வெளியிட்ட ஊரடங்கு தொடர்பான அறிவிப்பில், நவம்பர் 1ஆம் தேதி முதல் மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பணிகள் முழுமையாகச் செயல்படும் என்று கூறியிருந்தது. ஆனால் இந்த அறிவிப்பில் நர்சரி பள்ளிகள் திறக்கப்படும் என்று தவறாக இடம்பெற்றுவிட்டது. இதுகுறித்து விரையில் புதிய அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தனியார் கண்காட்சிகள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் நவம்பர் 1ஆம் தேதி நடத்த அனுமதிக்க முடியும்.
அங்கன்வாடி மைய அதிகாரிகள், சமையல் செய்பவர்கள் கண்டிப்பாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
100 நபர்களுக்கு மிகாமல் திருமணம் போன்ற நிகழ்வுகள் நடத்தலாம்.
இறுதிச் சடங்கிற்கு 50 நபர்களுக்கு மிகாமல் கூட்டம் கூடக் கூடாது.
ப்ளே ஸ்கூல், நர்சரி பள்ளிகள் தற்போதைக்கு திறப்பு இல்லை. இதுகுறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஆலோசனை நடைபெற்று வருகிறது.
**-பிரியா**
�,