hஎன். ஆர். இளங்கோவின் மகற்காற்றும் கடமை!

Published On:

| By admin

மாநிலங்களவை உறுப்பினரும் திமுக தலைமைக் கழக சட்ட ஆலோசகரும் மூத்த வழக்கறிஞருமான என். ஆர். இளங்கோவின் மகன் ராகேஷ் கடந்த மார்ச் 10ஆம் தேதி சென்னை அருகே சாலை விபத்தில் உயிர் இழந்தார்.

சட்ட மாணவரான ராகேஷ் நினைவாக நீதி மற்றும் சமத்துவத்திற்கான ராகேஷ் ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை தோற்றுவித்திருக்கிறார் என். ஆர். இளங்கோ.

இந்த அறக்கட்டளை துவக்க நிகழ்வும் ராகேஷ் படத்திறப்பு நிகழ்வும் இன்று ஏப்ரல் 16ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு‌. க. ஸ்டாலின் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, ராகேஷ் திருவுருவப் படத்தை திறந்து வைத்தார். ராகேஷ் பெயரிலான அறக்கட்டளையையும் தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் முன்னாள் ஒன்றிய அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல்,
திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி எம்பி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மூத்த பத்திரிக்கையாளர் என் ராம், ஓய்வுபெற்ற நீதியரசர் ராஜ இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சட்ட மாணவரான தனது மகன் பெயரில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு மூலம் சட்டக்கல்வி பயில விரும்பும் ஏழை மாணவர்களுக்கும், சட்ட உதவி தேவைப்படும் ஏழைகளுக்கும் தேவையான உதவிகளை செய்ய இருக்கிறார் என்.ஆர். இளங்கோ.

**வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share