^தூண் சரிந்தது: கண்கலங்கிய ரங்கசாமி

Published On:

| By Balaji

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என்.ஆர்.காங்கிரஸ் பொதுச் செயலாளர் வி பாலன், இன்று (ஜூலை 28) மரணம் அடைந்தார். இதனால் கட்சியின் நிறுவனர் ரங்கசாமி கலங்கிப் போயிருக்கிறார்.

முன்னாள் முதல்வர் ரங்கசாமி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைத் துவக்க முக்கிய காரணமாகவிருந்தவர், கட்சியை வழி நடத்தியவர், கூட்டணி விஷயமாக மாற்றுக்கட்சியின் தலைவர்களைச் சந்திப்பவர் என ஒட்டு மொத்த வேலைகளையும் கவனித்து வந்தவர் வி.பாலன்தான். அதேநேரம், ரங்கசாமியை தொண்டர்கள், நிர்வாகிகள் என யாரும் நெருங்காத அளவுக்கு வளையமாக இருந்தவரும் பாலன்தான் என்றும் பரவலாகப் பேசப்பட்டுவந்தது. இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியுடன் அறிமுகம் மிக்க பாலன் தேசிய அரசியல் கட்சித் தலைவர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தவர்.

இப்படிப்பட்ட பொதுச் செயலாளரை இழந்து கட்சியின் நிறுவனர் ரங்கசாமி மிகுந்த கவலையில் இருக்கிறார். “தேர்தல் நேரத்தில் முழு வேலையும் பாலனே கவனித்து வருவார். பாலனைப் பற்றி யார் எந்த குற்றச்சாட்டுகளை சொன்னாலும் ரங்கசாமி ஏற்றுக்கொள்ளமாட்டார். என்.ஆர்.காங்கிரஸ் என்றால் அது பாலன்தான் என்று நம்பிக்கையோடு இருந்தார் ரங்கசாமி. அப்படிப்பட்ட பாலனின் இறப்பைத் தாங்கிக்கொள்ளாமல் கட்சியின் தூணே சரிந்துவிட்டதே என்று கலங்கி அழுதுகொண்டிருக்கிறார் ரங்கசாமி” என்கிறார்கள் என்.ஆர்.காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள்.

**-காசி**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share