ஆதியோகி சிலை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதா?: ஆர்.டி.ஐ தகவல்!

politics

வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா யோகா மையம் வனப்பகுதிகளை ஆக்கிரமித்து வைத்திருப்பதாக நீண்ட நாட்களாகப் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் ஈஷா யோகா மையம் எந்தவித ஆக்கிரமிப்பும் செய்யவில்லை என்று தமிழக அரசு பதிலளித்துள்ளது.

சத்குரு ஜகி வாசுதேவால் தொடங்கப்பட்ட ஈஷா யோக மையத்திற்குத் தமிழகம், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் பலரும் பயிற்சி எடுக்க வருகின்றனர்.

ஆண்டுதோறும் இங்குச் சிவராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த சூழலில் ஈஷா யோகா மையம், வனப்பகுதிகளையும், யானை வழித்தடங்களையும் ஆக்கிரமித்து இருப்பதாகப் பல ஆண்டுகளாகவே குற்றச்சாட்டுகள் இருந்த வண்ணம் இருந்தன.

இதுதொடர்பான ஆர்டிஐ கேள்விகளுக்கு, பொது தகவல் அலுவலர் மற்றும் கண்காணிப்பாளர் (பொது), கோவை மாவட்ட வன அலுவலகம், அளித்துள்ள பதிலில், “வனப்பகுதியில் ஈஷா எவ்வித ஆக்கிரமிப்பும் செய்யவில்லை” என்று தெரிவித்துள்ளது.

வனப்பகுதியில் ஈஷா மையம் சார்பில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, அவ்வாறு எந்த கட்டிடமும் கட்டப்படவில்லை என்று கூறியுள்ளது.

ஆதியோகி சிலை அமைந்துள்ள மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்கள் வனப்பகுதியில் வருகிறதா என்ற கேள்விக்கு, ”மேற்கூறிய பதில்களால் இந்த கேள்வி எழுவதற்கான தேவையில்லை” என்று தெரிவித்துள்ளது.

ஈஷா மையம் சுற்றியுள்ள பகுதிகளில் யானைகள் வழித்தடம் உள்ளதா என்ற கேள்விக்கு,

“கோவை வனப்பகுதியில் வரையறுக்கப்பட்ட யானைகள் வழித்தடம் இல்லை” என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.

ஈஷா மையத்தின் அருகில் உள்ள யானை வழித்தடங்கள் குறித்த விவரங்கள் வேண்டும் என்ற கேள்விக்கும், கோவை வனப்பகுதியில் வரையறுக்கப்பட்ட யானைகள் வழித்தடம் இல்லை என்று பதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஈஷா மையம் அருகில் யானைகள் வாழ்விடம் உள்ளதா, யானைகள் வாழ்விடத்தில் ஈஷாவின் கட்டுமானங்கள் உள்ளதா, ஈஷாவிற்குச் சொந்தமான இடங்கள் ஏதேனும் யானைகளின் வாழ்விடங்களை ஆக்கிரமித்துள்ளதா என்ற கேள்விகளுக்கு ‘இல்லை; என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *