தமிழகத்தில் என்.ஐ.ஏ சோதனை!

politics

தமிழகத்தில் 8 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடந்து வருகிறது.

மயிலாடுதுறையில் கடந்த பிப்ரவரி மாதம் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சாதிக் பாஷா என்பவரும் அவரது கூட்டாளிகளும் காவல்துறையினரை மிரட்டினர். சாதிக் பாஷா ஒரு துப்பாக்கியை வைத்து சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை மிரட்டியுள்ளார். பின்னர் அந்த துப்பாக்கி ஏர் கன் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக சாதிக் பாஷா உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பின்னர் என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் மயிலாடுதுறை நீடூரைச் சேர்ந்த சாதிக் பாஷா, எலந்தங்குடியைச் சேர்ந்த ஜஹபர் அலி, கூட்டாளிகளான கோவை முகமது ஆஷிக், காரைக்கால் முகமது இர்பான், சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ரஹ்மத் ஆகிய 5 பேருக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நீடூர், எலந்தங்குடி, அரிவேலூர், கிளியனூர், உத்திரங்குடி ஆகிய இடங்களில் சென்னையிலிருந்து சென்ற எஸ்.பி ஸ்ரீஜித் தலைமையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஐந்து குழுக்களாக பிரிந்து தனித்தனியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்குறிப்பிட்ட நபர்களுக்கு தெரிந்தவர்களிடம் சில ஆவணங்களை காட்டி விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்திரங்குடியில் ஜெகபர் சாதிக் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில் சுண்ணாம்பு கார வீதியிலுள்ள ஒரு வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. சென்னையில் மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடந்து வருகிறது.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *