jநீட் விலக்கு மசோதா: ஆளுநர் மாளிகை பதில்!

politics

u

நீட் விலக்கு மசோதா தொடர்பான ஆர்.டி.ஐ. கேள்விக்கு ஆளுநர் மாளிகை பதில் அளித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில், நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு அன்றைய தினமே ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது தமிழக ஆளுநராக பன்வாரி லால் புரோஹித் இருந்தார். இந்த மசோதா மீது அவர் எந்த முடிவும் எடுக்காத நிலையில் தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றார்.

அவர் பொறுப்பேற்றதும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை இருமுறை சந்தித்தார். அப்போது நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஆளுநரிடம் முதல்வர் பேசியதாகத் தகவல்கள் வெளியாகின. இருப்பினும் தற்போதுவரை அந்த சட்ட மசோதா மீது முடிவு எடுக்கப்படாமல் உள்ளது.

இந்தச்சூழலில் தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்டு தி.மு.க மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழகத்தின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவினர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்துப் பேசவுள்ளனர்.

இந்நிலையில், நீட் விலக்கு மசோதா ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், நீட் விலக்கு மசோதா மீது ஆளுநர் எடுத்த நடவடிக்கை என்ன? அந்த மசோதாவின் தற்போதைய நிலை என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு ஆளுநர் மாளிகை தரப்பில், இந்த கோப்பு பரிசீலனையில் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-பிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *