sபோப் பிரான்சிசை இந்தியாவுக்கு அழைத்த மோடி

politics

பிரதமர் மோடி போப் பிரான்சிஸசை இன்று சந்தித்து இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் நேற்று இத்தாலி சென்றார். ரோம் நகரில் நடைபெறும் 16ஆவது ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி பிரதமர் மரியோ டிரகியின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அங்குச் சென்றுள்ளார்.

இத்தாலி அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்வலஸ் மிக்கேல், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் ஆகியோரை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து ரோம் பகுதியிலுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் இன்று வாடிகன் நகருக்குச் சென்ற பிரதமர் மோடி கத்தோலிக்க தலைவரான போப் ஆண்டவர் என்றழைக்கப்படும் போப் பிரான்சிஸசை சந்தித்துப் பேசினார். இந்தியப் பிரதமருக்கு போப் ஆண்டவர் சிறப்பு வரவேற்பு அளித்தார்.

இருவர் உடனான இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் மட்டுமே திட்டமிட்டிருந்த நிலையில் சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பின்போது போப் பிரான்சிஸசை பிரதமர் மோடி இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதோடு The Climate Climb: India’s strategy, actions and achievements’ என்ற புத்தகத்தையும் பரிசளித்தார். இதுகுறித்து பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் போப் பிரான்சிஸ் அவர்களுடன் மிகவும் அன்பான சந்திப்பு நடைபெற்றது. அவருடன் உலகின் பலதரப்பட்ட பிரச்சினைகள் பற்றி விவாதிக்க வாய்ப்பு கிடைத்தது. அவரை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி வாட்டிகன் நகரிலிருந்து புறப்பட்டார். அவருடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் சென்றனர்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *