Yஎன் குரு அத்வானி: வெங்கையா நாயுடு

Published On:

| By Balaji

இன்று (ஜூலை 5) நாடு முழுதும் குருபூர்ணிமா கொண்டாடப்படுவதை ஒட்டி இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு தனது நீண்ட வாழ்க்கைப் பயணத்தின் பல்வேறு காலகட்டங்களில் தனது கண்ணோட்டத்தையும், வாழ்க்கையையும் வடிவமைத்துக் கொள்ள உதவிய எல்.கே.அத்வானி உள்ளிட்ட குருவினருக்கு தனது நன்றியையும், கடப்பாட்டையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

பிறந்த 15வது மாதத்திலேயே தாயை இழந்த வெங்கையா நாயுடு தன் தாத்தா பாட்டி இருவரையுமே முதல் குருக்களாகக் குறிப்பிடுகிறார். தனது பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகக் காலகட்டங்களில் தன்னை வழிநடத்திய மீதி 56 ஆசிரியர்களையும் அவர்களின் பெயர் சொல்லி நினைவு கூர்ந்துள்ளார்.

இந்திய மரபில் குரு சிஷ்யப் பரம்பரையில் ஆளுமையை வளர்த்தல் உள்ளிட்ட சிஷ்யர்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு குரு ஆற்றுகின்ற பங்களிப்புக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்ற வெங்கையா நாயுடு, தற்போதைய தொழில்நுட்ப யுகத்தில் தனிப்பட்ட கவனத்துடன் கல்வி கற்றுத் தருமாறு ஆசிரியர்களை வலியுறுத்தினார். சரியான மதிப்பீடுகள் மற்றும் கண்ணோட்டங்களுடன் முழுமையான தனி நபர்களை வளர்த்தெடுப்பதன் மூலம் தேசியக் கட்டுமானத்திலும் ஆசிரியர்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றனர் என்பதை அவர் வலியுறுத்தினார்.

“இணையம் உங்களுக்கு தகவலைத் தரலாம், ஆனால் ஆசிரியர் தான் அந்த தகவலைப் பகுத்தாய்ந்து மதிப்பீடு செய்யும் திறன்களைக் கற்றுத் தரமுடியும். இவை உயர்நிலைத் திறன்கள் ஆகும். இத்திறன்கள் சிரமமான காலகட்டங்களில் விஷயங்களை புரிந்து கொள்ள உதவும். குரு மட்டுமே நன்மதிப்புகள், மானுட அக்கறை, கருணை மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை தனது சீடர்களிடம் வளர்த்தெடுக்கவும் அவர்களுக்கு சரியான பாதையைக் காட்டவும் முடியும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share