Wஜூலையில் மழைக்கால கூட்டத்தொடர்!

Published On:

| By Balaji

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை மாதத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் நிலையின் காரணமாக இந்தியாவில் பல்வேறு துறைகளின் பணிகளும் முடங்கியுள்ளன. இந்த சூழலில் நடப்பாண்டு மழை கால கூட்டத் தொடர், திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

ஏனென்றால் முதல் அலையின் போது, வழக்கமாக ஜூலை மாதம் நடைபெற வேண்டிய மழைக்கால கூட்டத் தொடர் செப்டம்பர் மாதம் தான் நடைபெற்றது.

இந்நிலையில் நடப்பாண்டின் மழைக்கால கூட்டத்தொடர் நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஜூலையில் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பிடிஐ ஊடகத்துக்கு, அவர் அளித்த பேட்டியில், “கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி மழைக்கால கூட்டத்தொடர் நடத்தப்படும். அதற்கு முன்னதாக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள், செயலாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸாவது போட்டிருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share