பிரதமர் நரேந்திர மோடி இன்று நவம்பர் 15 ஆம் தேதியை, பழங்குடியினர் கௌரவ தினமாக அறிவித்தார்.அதை ஒட்டி மத்தியப் பிரதேசத்தில் நடந்த பழம்ங்குடியினர் மகா சம்மேளனத்தில் பழங்குடியின சமுதாய நலனுக்கான பல்வேறு முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மத்தியப்பிரதேச ஆளுநர், முதலமைச்சர், ஒன்றிய அமைச்சர்கள் டாக்டர் வீரேந்திர குமார், நரேந்திர சிங் தோமர், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, இணை அமைச்சர்கள் எல்.முருகன், பிரகலாத் பட்டேல், பக்கான் சிங் குலஸ்தே ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்தியா இப்போதுதான் தனது முதலாவது பழங்குடியினர் கௌரவ தினத்தை கொண்டாடுகிறது. சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டில் முதல் முறையாக இத்தகைய பெரும் அளவிலான பழங்குடியின சமுதாயத்தின் முழுமையான கலை- கலாச்சாரம், விடுதலைப்போராட்டம் மற்றும் நாட்டு நிர்மாணத்தில் அவர்களது பங்கு நினைவுகூரப்பட்டு பெருமையுடன் கௌரவிக்கப்படுகிறது.
. பழங்குடியின சமாஜ் உடன் எனக்கு நீண்ட காலத் தொடர்புண்டு. அவர்களது ஆன்மீகச் செழுமை, கலாச்சார வாழ்க்கை, பாடல்கள் நடனங்கள் உள்பட பழங்குடியின மக்களின் ஒவ்வொரு கலாச்சார அம்சமும் ஒரு வாழ்க்கைப் பாடத்தை பிரதிபலிக்கிறது.
விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்ற பழங்குடியின தலைவர்கள் மற்றும் தலைவிகளின் ஊக்கமூட்டும் வரலாற்றை நாட்டுக்கு முன்பாகக் கொண்டு வந்து புதிய தலைமுறையினருக்கு அவர்களை அறிமுகப்படுத்தவேண்டியது நமது கடமை “என்று பிரதமர் வலியுறுத்தினார்.
மேலும், ” அடிமைக் காலத்தில் அந்நிய ஆட்சிக்கு எதிராக, காசி கரோ இயக்கம், மிசோ இயக்கம், கோல் இயக்கம் உள்ளிட்ட ஏராளமான போராட்டங்கள் நடைபெற்றன. கோந்த் மகாராணி வீர துர்காவதியின் துணிச்சலாகட்டும் அல்லது ராணி கமலாபதியின் தியாகமாகட்டும் நாடு அவர்களை மறவாது. வீர மகாரானா பிரதாப்பின் போராட்டத்தை அவருடன் தோளோடு தோள் நின்று போராடிய தைரியம் மிக்க பில் மக்களின் தியாகங்கள் இல்லாமல் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.
இன்று தேசத்தை கட்டமைப்பதில் பழங்குடியின சமுதாயத்தின் பங்கு குறித்து நாம் தேசிய அரங்குகளில் விவாதிக்கும்போது, சிலர் வியப்படைகிறார்கள். அவர்களுக்கு இந்திய கலாச்சாரத்தை வலுப்படுத்துவதில் பழங்குடியின சமுதாயம் எந்த அளவுக்கு பங்களித்துள்ளது என்பது தெரியாது” என்று பிரதமர் கூறினார்.
பழங்குடியின சமுதாயத்தின் பங்களிப்பு குறித்து நாட்டுக்கு சொல்லப்படாததும். அவ்வாறு சொன்னாலும் மிகக் குறைந்த அளவு தகவல்களை அளித்து வந்ததும்தான் இதற்கு காரணமாகும். “சுதந்திரத்திற்குப் பின்னர் பல பத்தாண்டுகளாக நாட்டின் ஆட்சியை நடத்தியவர்கள், தங்களது சுய நல அரசியலுக்கு முன்னுரிமை அளித்ததால்தான் இவ்வாறு நடந்தது” என்று திரு மோடி சுட்டிக்காட்டினார். நாட்டின் இதரப் பகுதிகளில் கிடைப்பது போல இன்று பழங்குடியினப் பகுதிகளில் ஏழைகளுக்கு வீடுகள், கழிவறைகள், இலவச மின்சாரம், எரிவாயு இணைப்புகள், பள்ளி, சாலை மற்றும் இலவச சிகிச்சை போன்ற வசதிகள் அதே வேகத்தில் கிடைத்து வருகின்றன என்று பிரதமர் கூறினார்.
மத்திய அரசின் அனைத்து நலத்திட்டங்களிலும் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பின் தங்கிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். நாட்டின் பழங்குடியினப் பகுதிகளில் மிக அதிகமான வளங்களும் ஆதாரங்களும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆனால், “முன்பு அரசில் இருந்தவர்கள் இந்தப் பகுதிகளை சுரண்டும் கொள்கையைப் பின்பற்றி வந்தார்கள். நாங்கள் இந்தப் பகுதிகளின் வளங்களை முறையாகப் பயன்படுத்தும் கொள்கையைப் பின்பற்றி வருகிறோம்” என்று அவர் கூறினார். வனச்சட்டங்களை மாற்றியமைத்ததன் மூலம் வன வளங்கள் பழங்குடியின சமுதாயத்துக்கு எவ்வாறு கிடைக்குமாறு செய்யப்பட்டுள்ளது என்பதை அவர் விளக்கினார்.
90-க்கும் மேற்பட்ட வன உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்பட்டு வருகிறது. முன்பு 8 முதல் 10 பயிர்களுக்கு மட்டுமே இது வழங்கப்பட்டு வந்தது.150-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்த மாவட்டங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் 9 புதிய பழங்குடி ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ள தாய்மொழி பழங்குடியின மக்களுக்கு பயனளிக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடிக்கு பழங்குடியினர் தங்களின் பாரம்பரிய அணிகலன்களைஅணிவித்து அழகு பார்த்தனர்.
**-வேந்தன்**
�,”