~நான்கு அனுமார் சிலைகள்: ராமேஸ்வரம் நோக்கி மோடி

Published On:

| By admin

இந்தியாவின் நான்கு திசைகளிலும் பிரம்மாண்டமான 4 அனுமார் சிலைகளை திறந்துவைக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
ஏற்கனவே வடக்கு திசையில் சிம்லாவில் அனுமார் சிலை திறக்கப்பட்ட நிலையில் நாளை ஏப்ரல் 16ஆம் தேதி மேற்குத் திசையில் அனுமார் சிலையைத் திறந்து வைக்க இருக்கிறார் பிரதமர் மோடி.

இதுகுறித்து ஒன்றிய அரசின் செய்திக் குறிப்பில், “ஹனுமத் ஜெயந்தியையொட்டி குஜராத் மாநிலம் மோர்பியில் 108 அடி உயர ஹனுமான் சிலையை 2022 ஏப்ரல் 16 அன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைப்பார்.

ஹனுமன்ஜி4 தாம் அதாவது நான்கு அனுமார் சிலைகள் திட்டத்தின் ஒரு பகுதியாக,

நாடு முழுவதும் நான்கு திசைகளில் அமைக்கப்படவிருக்கும் 4 சிலைகளில் இது இரண்டாவது சிலையாகும். இது மேற்கு பக்கத்தில் மோர்பியில் உள்ள பரம் பூஜ்ய பாபு கேசவானந்ஜி ஆசிரமத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இந்தத் தொடர்செயல்பாட்டின் முதலாவது சிலை வடக்குப் பகுதியில் 2010ல் சிம்லாவில் அமைக்கப்பட்டது.

இந்த வகையில் தென்னிந்தியாவில் பிரமாண்ட அனுமார் சிலை ராமேஸ்வரத்தில் நிறுவும் பணி தொடங்கியிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

**வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share