ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டிகளை நடைமுறைப்படுத்தக் கோரி தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி வருகிறது.
கடந்த 21ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமைச் செயலாளர் இறையன்புவை நேரில் சந்தித்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில், ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மனு அளித்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (பிப்ரவரி 28) மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில், கட்சி நிர்வாகிகள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களைச் சந்தித்து, ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டிகளை அமைக்கக் கோரி மனு அளித்தனர்.
இந்த நிலையில் நேற்று (மார்ச் 1) மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “உள்ளாட்சி அமைப்புகளில் பங்கேற்று ஜனநாயகத்தை உறுதி செய்யவும், வரவு செலவுகளில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடித்து ஊழலைக் கட்டுப்படுத்தவும் ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டிகளை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்.
அதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களிடம் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. உள்ளாட்சியில் தன்னாட்சியை உறுதி செய்ய வேண்டியது மாநில அரசின் கடமை. தமிழக அரசு அதைச் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
**-வினிதா**
rஇதை உறுதி செய்யவேண்டியது அரசின் கடமை: கமல்
Published On:
| By admin

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel