gமுதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு!

Published On:

| By Balaji

மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை தி.நகரில் இன்று (அக்டோபர் 16) நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் கலந்துகொண்டனர். அதில், சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியா அல்லது கூட்டணி அமைத்துப் போட்டியா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து, நடைபெற இருக்கும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது தனித்துப் போட்டியிடுவது அல்லது ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது, வேட்பாளர்களை இறுதி செய்வது, தேர்தல் வெற்றிக்கான வியூகம் அமைப்பது, தேர்தல் பணிக்குழுக்கள் அமைப்பது, கன்னியாகுமரி மக்களவை தொகுதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பு கமல்ஹாசனுக்கே அளிக்கப்படுகிறது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

அப்போது, கட்சியின் உட்கட்டமைப்பு வலுப்பெற்று வருவதையும், கட்சியில் புதிய உறுப்பினர்கள் பெருமளவில் இணைந்து வருவதையும், இந்தத் தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக மக்கள் நீதி மய்யம் வலுப்பெற்று வருவதையும் ஊடகங்கள் தொடர்ந்து குறிப்பிட்டு வருவதைக் குறிப்பிட்ட தலைவர் கமல்ஹாசன், தங்களது தொகுதிகளில் தேர்தல் பணிகளை இப்போதே ஆரம்பித்துவிட்ட நிர்வாகிகளைப் பாராட்டினார். அனைவரும் ஒருமித்து தேர்தல் வெற்றி ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு களப்பணியாற்றி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதன்பின்னர் அறிவிப்பை வெளியிட்ட கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன், முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசனை முன்னிறுத்தி கட்சியினர் பிரச்சாரம் செய்வார்கள் என்று தெரிவித்தார்.

**எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment