yஎம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், பவுன்ராஜுக்கு கொரோனா

politics

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி முன்களப் பணியாளர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கும் தொடர்ந்து கொரோனா உறுதிசெய்யப்பட்டு வருகிறது. இதுவரை நான்கு அமைச்சர்கள் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள், மூன்று எம்.பி.க்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோலவே விஷால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் திருவாடனை சட்டமன்ற உறுப்பினரும், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவருமான நடிகர் கருணாஸுக்கு நேற்று (ஆகஸ்ட் 5) கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் கருணாஸ் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அவரிடம் பாதுகாவலராகப் பணியாற்றியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் நடிகர் கருணாஸுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி திண்டுக்கல் இந்திரா நகரிலுள்ள அவரது வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் அவர் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதுபோலவே பூம்புகார் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தை புதிதாக உருவாக்குவது தொடர்பான கருத்து கேட்புக் கூட்டம் கடந்த ஜூலை 30 நடைபெற்றது. அதில் பங்கேற்ற நாகை எம்.பி எம்.செல்வராஜ், மயிலாடுதுறை எம்.பி செ.ராமலிங்கம் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து, இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகள் பரிசோதனை செய்துகொண்டனர். இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜுக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னை சென்றுள்ள பவுன்ராஜ் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *