மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 வது அகில இந்திய மாநாடு கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்று வருகிறது.
இம்மாநாட்டில் இன்று ஏப்ரல் 9 ஆம் தேதி மத்திய மாநில உறவு என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கத்தில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டதும் நான் உடனே சம்மதித்தேன்” என்று சில நிமிடங்கள் மலையாளத்திலேயே பேசிய ஸ்டாலின், “எல்லாவற்றுக்கும் மேலே எண்ட பேரு ஸ்டாலின்” என்று ரஷ்யாவின் ஸ்டாலினை நினைவுபடுத்திக் கூறியதும் மாநாட்டில் பலத்த கரகோஷம் எழுந்தது.
“திராவிட கம்யூனிஸ்டு இயக்கங்களுக்கு இடையே உள்ள பந்தம் என்பது வருஷங்களுக்கு மேல் ஆழமானதாகும். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை தமிழில் மொழி மொழிபெயர்க்க செய்தவர் தந்தை பெரியார்” என்று குறிப்பிட்ட ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்தியாவில் உள்ள முதல்வர்களுக்கு எல்லாம் வழிகாட்டியாகத் திகழ்வதாகவும் புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து அவர் மத்திய மாநில உறவுகள் பற்றி உரையாற்றினார்.
**வேந்தன்**