பத்திரப்பதிவு துறை சீரமைக்கப்படும்: அமைச்சர் மூர்த்தி

Published On:

| By Balaji

f

ஒருசில மாதங்களில் பத்திரப்பதிவுத் துறை முழுமையாக சீரமைக்கப்படும் என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 20வது நினைவு தினமான இன்று(ஜூலை 21) மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள சிவாஜியின் சிலைக்கு பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “ உலகம் போற்றும் நடிகராக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். சிவாஜியும், கலைஞரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். நடிப்பின் மூலம் நல்ல கருத்துக்களை கிராமங்களுக்கு கொண்டு சென்றவர் சிவாஜி கணேசன்” என கூறினார்.

பின்பு, ”பத்திரப்பதிவு துறையில் வருகின்ற புகார்கள், உண்மையாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இத்துறையில் நடைபெறும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

ஒருசில மாதங்களில் துறை முழுமையாக சீரமைக்கப்படும். எளிமையாக பத்திரவுப்பதிவு மேற்கொள்ள விரைவில் மாற்றங்கள் கொண்டுவரப்படும். திரையங்குகள் திறப்பது குறிப்பது முதல்வர் முடிவு எடுப்பார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share