மெடிக்கல் மிராக்கிள்: மறுபிறவி எடுத்த அமைச்சர் காமராஜ்

Published On:

| By Balaji

கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் காமராஜ் நாளை (பிப்ரவரி 4) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இன்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அமைச்சர் காமராஜுக்கு சிகிச்சை அளித்த எம்.ஜி.எம். மருத்துவமனை மருத்துவர்களுடன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர்,

“அரசு மற்றும் தனியார் மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையால் அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். அவர் மறுபிறவி எடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அமைச்சருக்கு ஆரம்பத்தில் 95% நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தது. நமது மருத்துவர்களின் தரமான சிகிச்சையால் அவர் மறுபிறவியெடுத்து இன்று நலம் பெற்று நார்மல் வார்டுக்கு வந்திருக்கிறார். இன்று மாலை அல்லது நாளை காலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இதன் மூலம் தமிழ்நாட்டு மருத்துவத் துறையின் தரம் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் எம்.ஜி.எம். மருத்துவர்களூக்கும், அரசு மருத்துவர்களுக்கும், சுகாதாரத்துறை செயலாளருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.விஜயபாஸ்கர்.

அமைச்சர் காமராஜ் இப்போது நலமோடு இருக்கிறார். நடக்கிறார். எனினும் இரண்டு, மூன்று வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். சென்னையில் கொரோனா உச்சத்தில் இருந்தபோது தன் உயிரை துச்சமென கருதி வீடு வீடாக போய் களப் பணியில் ஈடுபட்டார். ஒரு மக்கள் பிரதிநிதி எப்படி ரோல் மாடலாக இருக்க வேண்டும் என்பதற்கு காமராஜ் உதாரணம். மருத்துவத் துறை எப்படி வலுவாக இருக்க வேண்டும் என்பதற்கு நமது தமிழக மருத்துவத் துறை உதாரணம். காமராஜின் கேஸ் ஹிஸ்டரி என்பது மருத்துவத் துறையில் மெடிக்கல் மிராக்கிள்” என்று குறிப்பிட்டார் சுகாதாரத்துறை அமைச்சர்

**-வேந்தன்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share