விவசாயிகளுக்கு 10ஆயிரம் கோடி கடன்: அமைச்சர் இ.பெரியசாமி

politics

விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கும் மேல் கடன் விரைந்து வழங்க கூட்டுறவுத் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியதாக அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (மே 27) காணொலி வாயிலாகக் கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட கூட்டுறவுத் துறை அலுவலர்களுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், விவசாயக் கடன்களை விரைவாக வழங்க கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் உள்ள விவசாயிகள், விவசாயத்தைத் தொடங்குவதற்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கும் மேல் கடன் வழங்குவதற்குக் கூட்டுறவுத் துறை அலுவலர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது.

விரைந்து கடன் வழங்க வேண்டும். விவசாயிகள் பயிர்க்கடன் கேட்டுக் கொடுக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் தாமதமின்றி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான உரங்களை இருப்பு வைத்து வழங்க வேண்டும்.

மேலும் இயற்கை விவசாயத்துக்கு விவசாயிகள் மாறி வருவதால், இயற்கை உரத்தை வாங்கி வழங்க வேண்டும். அதேபோல் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கும் விரைந்து கடன் வழங்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் சிறு வணிகக்கடன்கள் அதிகமாக வழங்கப்பட்டு உள்ளது. இதனைத் திருப்பி செலுத்தும் சிறு வணிகர்களுக்குக் கூடுதலாகக் கடன் வழங்க வேண்டும்.

ரேஷன் கடைகளில் எடை குறையாமல் பொருட்களைப் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.

கூட்டுறவு பண்டகசாலைகளில் வெளிச்சந்தையை விடக் குறைந்த விலையில் பொருட்களை விற்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியதாகத் தெரிவித்தார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.