வருவாய் சரிந்தது, கடன் பெருகியது: வெள்ளை அறிக்கையில் தள்ளாடும் தமிழ்நாடு

politics

தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் இன்று (ஆகஸ்டு9) சென்னை தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.

2001 ஆம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் பொன்னையன் வெளியிட்ட நிதி பற்றிய வெள்ளை அறிக்கைக்குப் பிறகு 20 ஆண்டுகள் கழித்து இப்போது தமிழ்நாட்டின் நிதி நிலை பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

2001-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருந்து இறங்கியபோது, கடன் அளவு ரூ.34,540 கோடியாக இருந்தது. அடுத்து அதிமுக ஆட்சி அமைந்து அது முடியும்போது 2006 இல், கடன் அளவு ரூ.63,848 கோடியாக அதிகரித்தது. 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்து இறங்கியபோது, கடன் அளவு 1.14 லட்சம் கோடியாக உயர்ந்தது. பிறகு, 2011 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கடன் அளவு ரூ.2.28 லட்சம் கோடியாக கூடியது. ஆனால் 2016-21 அதிமுக ஆட்சியின் முடிவில் கடன் தொகை 4.85 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது.

இந்த நிலையில்தான் ஏற்கனவே திமுக சார்பில் அறிவிக்கப்பட்டதுபோல தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.

”தமிழ்நாட்டு நிதி நிலைமையின் உண்மைத் தன்மை என்ன, அரசின் கடன் சுமை எவ்வளவு, முக்கியமான பொது நிறுவனங்கள் மின்சாரவாரியம், போக்குவரத்துக் கழகம், மெட்ரோ வாட்டர் போன்ற நிறுவனங்களின் நிலைமை என்ன என்பதை பொதுமக்களுக்குத் தெரிவிப்பது ஆகிய நோக்கத்துக்காக இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது”என்று கூறினார்.

அடிப்படைப் பிரச்சினை அரசுக்கு வருமானம் இல்லை என்று தெரிவித்த நிதியமைச்சர், “இந்த ஐந்து வருடத்தில் எடுத்த பொதுக் கடன் 3 லட்சம் கோடி. அதில் பாதி 1.5லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறைக்காக வாங்கப்பட்டுள்ளது.2020-21இல் மட்டும் தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை 61 ஆயிரத்து 320 கோடி ரூபாயாக இருந்திருக்கிறது. தற்போதைய நிலைமையில் தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் கடன் சுமை இருக்கிறது. இந்தியாவில் வேறு எந்த பெரிய, வளர்ந்த மாநிலமும் கடைசி ஐந்து வருடங்களில் இந்த அளவுக்கு சரியவில்லை. கொரோனாவுக்கு முன்பாகவே இந்த சரிவு ஆரம்பித்துவிட்டது”என்று தெரிவித்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன்.

120 பக்கம் கொண்ட இந்த வெள்ளை அறிக்கையில் தமிழக நிதிநிலைமை பற்றிய பல்வேறு தகவல்கள் இருக்கின்றன.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *