rகேரளா: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 சீட்!

Published On:

| By Balaji

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரம் வந்த அமித் ஷா பாஜகவுக்கு பிரச்சாரம் செய்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் ஆளும் கம்யூனிஸ்ட் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது.

கேரள சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6இல் நடைபெற உள்ள நிலையில் இந்தத் தேர்தலில் கம்யூனிஸ்ட் – காங்கிரஸ் இரு பிரதான கட்சிகளிடையே பாஜகவும் இந்தத் தேர்தலை தீவிரமாகச் சந்தித்து வருகிறது. தற்போது கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி கூட்டணியை பலப்படுத்தி வரும் நிலையில் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் 25 தொகுதிகளில் போட்டியிடும் என மாநிலச் செயலாளர் கனம் ராஜேந்திரன் நேற்று தெரிவித்தார். கேரள சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதில், இடது ஜனநாயக முன்னணி மற்றும் வலது ஜனநாயக முன்னணி இடையே கடும் போட்டி நிகழவுள்ளது.

தொகுதி ஒதுக்கீடு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கனம் ராஜேந்திரன் கூறியதாவது, கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் 25 தொகுதிகளில் போட்டியிடும். அதில், 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும். தொடர்ந்து இரண்டு முறை போட்டியிட்டவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

**-சக்தி பரமசிவன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share