காங்கிரசின் செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு இன்று (அக்டோபர் 12) முறைப்படி பாஜக கட்சியில் இணைகிறார்.
முன்னதாக அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் தான் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று பகல் 12.45 மணியளவில் டெல்லியிலுள்ள பாஜக அலுவலகத்துக்கு வந்தார் குஷ்பு.
குஷ்புவின் பாஜக வருகை தொடர்பாக தமிழக பாஜக ஊடக பிரிவு தலைவர் ஏ என் எஸ் பிரசாத்திடம் பேசினோம்.
நடிகை குஷ்பு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் தென்னிந்தியா தாண்டி வட இந்தியாவிலும் புகழ்பெற்றவர். திரையில் தொடங்கி அரசியல் உலகிலும் முத்திரை பதித்த குஷ்பு பாஜகவின் தொலை நோக்குத் திட்டங்களை புரிந்துகொண்டு சரியான முடிவை துணிச்சலாக எடுத்துள்ளார்.
குஷ்பு பாஜகவுக்கு வருவது மிகவும் வரவேற்கத்தக்கது. இஸ்லாமிய சமுதாயத்தில் பிறந்த தமிழ்நாட்டில் ஜனங்களால் கொண்டாடக்கூடிய ஒரு கலை அரசியல் ஆளுமை பாஜகவுக்கு வருவது என்பது ஆரோக்கியமான விஷயம். தமிழகத்தின் வளர்ச்சியை விரும்பக் கூடிய அனைவரும் இதுபோன்ற முடிவெடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவிலும் அவர் பாஜகவின் பிரச்சார பீரங்கியாக செயல்படுவார். பெண்களிடத்திலும் குறிப்பாக இஸ்லாமிய பெண்களிடத்திலும் பாஜகவை கொண்டு சேர்ப்பதில் குஷ்பு தீவிரமாக செயலாற்றுவார். குறிப்பாக முத்தலாக் சட்டம் போன்ற பெண்கள் நலத் திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு தூதுவராக அவர் செயல்படுவார் என்று நம்புகிறேன்”என்கிறார் ஏ.என்.எஸ். பிரசாத்.
குஷ்பு பிகார் தேர்தலில் பாஜகவுக்காக பிரசாரத்தில் களமிறங்குவார் என்றும் பாஜக வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
**ஆரா**�,”