சிறுவயதில் தாயுடன் வாடகை வீட்டில்தான் வசித்ததாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக கமலா ஹாரீஸ் களம் இறங்குகிறார். இவர், ஜனநாயக கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பை விட 3 புள்ளிகள் வித்தியாசத்தில் அமெரிக்க அதிபராக வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். இந்த நிலையில், எக்ஸ் பக்கத்தில் கமலா ஹாரீஸ் தன் தாய், தங்கையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உருக்கமாக சில விஷயங்களை கூறியுள்ளார்.
சிறு வயதில் தாங்கள் வாடகை வீட்டில் வசித்ததாகவும் தனது தாயார் ஷியாமலா 10 வருடங்கள் கஷ்டப்பட்டு சொந்தமாக வீட்டை வாங்கியதாகவும் அந்த தருணம் அற்புதமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இளம் வயதில் படிப்பு செலவுகளை சமாளிக்க மெக்டொனால்ட் நிறுவனத்தில் உணவு சப்ளையராக தான் பணியாற்றியதாகவும் கமலா ஹாரீஸ் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் அதிகப்படியான செலவுகள் இருப்பதால் பலரும் பல வேலைகளை பார்த்து செலவுகளை சமாளிப்பதாகவும் தான் அமெரிக்க அதிபரானால் முதல் கட்டமாக செலவினங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கமலா ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது, 59 வயதாகும் கமலா ஹாரீசின் தந்தை டொனால்ட் ஹாரீஸ் ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர். தாயார் ஷியாமலா கோபாலன் சென்னையை சேர்ந்தவர். இவர் புற்று நோய் மருத்துவர் ஆவார். ஆனால், துரதிருஷ்டவசமாக தனது 70வது வயதில் ஷியாமலா கோபாலன் புற்றுநோய் தாக்கி இறந்து போனார்.
கமலா ஹாரீஸ் சிறுவயதாக இருக்கும் போதே பெற்றோர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். தாயார் ஷியாமலா அரவணைப்பில்தான் கமலா மற்றும் அவரின் தங்கை மாயா ஆகியோர் வளர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப், இதுவரை தன்னை இந்தியராக காட்டிக் கொண்டிருந்த கமலா ஹாரீஸ் தேர்தல் நெருங்குவதால் தற்போது தன்னை அமெரிக்க ஆப்ரிக்கராக காட்டிக் கொள்கிறார் என்று விமர்சித்ததும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
தேவநாதன் கைது: மயிலாப்பூர் நிதி நிறுவனம், டிவி நிலையத்திற்கு சீல்!
நடிகை ஜோதிகா குறித்து பயில்வான் ரங்கநாதன் சொன்ன அதிர்ச்சி தகவல்… உண்மையா?