|அப்படி வாங்க வழிக்கு: ரஜினிக்குக் கமல் ட்வீட்!

Published On:

| By Balaji

டெல்லியில் சிஏஏ எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடையே வன்முறை வெடித்த நிலையில், இதனைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசை வன்மையாகக் கண்டிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். வன்முறையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியிருக்க வேண்டும். டெல்லி கலவரம் என்பது உளவுத் துறையின் தோல்வி. உளவுத் துறையின் தோல்வி என்றால் அது, உள் துறை அமைச்சகத்தின் தோல்வி என்றும் கூறியிருந்தார்.

குறிப்பாக, ”வன்முறையை ஒடுக்கமுடியாவிட்டால் பதவியை ராஜினாமா செய்துவிட்டுச் செல்லவேண்டியதுதான்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ரஜினி பேச்சுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில், ”சபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை. வருக, வாழ்த்துக்கள் ” என்று பதிவிட்டுள்ளார்.

**-கவிபிரியா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share