நமது மின்னம்பலம் யூ ட்யூப் சேனலில் பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் தினந்தோறும் உரையாற்றி வருகிறார். ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், உணவு பற்றாக்குறை, அரசின் பொருளாதார நடவடிக்கைகள் பற்றியும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசுகிறார்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் மக்களவை உறுப்பினர் கனிமொழி, தனக்கு இந்தி தெரியாது என்றதால் ‘நீங்கள் இந்தியரா’ என்று கேட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று (ஆகஸ்ட் 14) ஜெயரஞ்சன் பேசினார். இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்பது தனிப்பட்ட நபரின் பிழையல்ல, ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு என்று வெளியாகிய கட்டுரையை மேற்கொள் காட்டினார்.
சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை இந்தி, ஆங்கில மொழிகளில் மட்டும் வெளியிட்டதை சுட்டிக்காட்டிய அவர், மாநில மொழிகளில் வெளியிடக் கோரிய உத்தரவும் காற்றில் பறக்கவிடப்பட்டதாக குற்றம்சாட்டினார். இதுபற்றி உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததையும் சுட்டிக்காட்டினார்.
**முழுக் காணொலியையும் கீழே காணலாம்**
�,”