�குண்டுராவ்-அழகிரி முதல் சந்திப்பு: திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு எத்தனை இடங்கள்?

politics

தமிழக காங்கிரஸின் பொறுப்பாளராக இருந்த முகுல் வாஸ்னிக் மாற்றப்பட்டு, கர்நாடகத்தைச் சேர்ந்த தினேஷ் குண்டுராவ் தமிழகப் பொறுப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குண்டுராவை சந்திப்பதற்காக நேற்று (செப்டம்பர் 21) இரவு பெங்களூரு புறப்பட்டிருக்கிறார். இன்று காலை தன்னை சந்திக்கும் அழகிரியோடு, தமிழக காங்கிரஸ் பற்றி ஆலோசனை நடத்துகிறார் குண்டுராவ்.

ஏற்கனவே தமிழக பொறுப்பாளராக இருந்த முகுல் வாஸ்னிக் சிலருக்கு ஆதரவாகவும், சிலருக்கு எதிர்ப்பாகவும் இருப்பதாக புகார்கள் கிளம்பிய நிலையில்தான்…தினேஷ் குண்டுராவ் தமிழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிந்த நிலையில் குண்டுராவை சந்திக்கிறார் அழகிரி. இந்த சந்திப்பில் தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் பெற இருக்கும் இடங்கள் பற்றி முதல்கட்ட ஆலோசனை நடத்தப்படலாம் என்று தெரிகிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் 200 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் நிறுத்தப்படக் கூடும் என்று அறிவாலய வட்டாரத்தில் ஆலோசனை நடந்துகொண்டிருக்கும் நிலையில்தான் குண்டுராவை சந்திக்கிறார் அழகிரி.

மேலும் தமிழக பொறுப்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு வரும் அக்டோபர் 8 ஆம் தேதி தினேஷ் குண்டுராவ் தமிழகம் வர இருக்கிறார். அதுபற்றியும் இந்த ஆலோசனையில் விவாதிக்கப்படுகிறது. இன்று அழகிரியை சந்திப்பதற்கு முன்பாகவே இந்து தமிழ் திசை நாளேட்டுக்கு தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அளித்த பேட்டியில், “காங்கிர‌ஸை தவிர்த்துவிட்டு தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலையை உருவாக்குவேன்”என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *